வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பெண் குழந்தைகளுக்கான பாடல் வரிகள் | Girl Baby Songs in Tamil

Updated On: October 27, 2023 6:00 AM
Follow Us:
girl baby songs in tamil
---Advertisement---
Advertisement

Girl Baby Songs in Tamil

பொதுவாக பாடல் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. பாடல் கேட்பதன் மூலம் மன அழுத்தம் குறைகிறது. சில பேர் பாடல் ஓடி கொண்டிருக்கும் போதே பாடல்களை தாமும் பாடுவார்கள். புது பட பாடல் வந்தால் அந்த பாடலை முணுமுணுத்து கொண்டே இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாடல்கள் பிடிக்கும். சில பேருக்கு செண்டிமெண்ட் பாடலும், காதல் பாடல் மெலோடி பாடல் போன்று பிடிக்கும். அதனால் இந்த பதிவில் பெண் குழந்தையை பற்றிய பாடலை பற்றி தெரிந்து கொள்வோம்.

பெண் குழந்தை பற்றிய பாடல் வரிகள்:

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார்புதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை

என் பிள்ளை எட்டு வைத்த நடையைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூரு மொழிகளில் வார்த்தை இல்லை

தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா…

பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள் தூங்கையிலே

சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது இவள்
மீசையில்லாத மகள் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையைப் பார்த்துக் கொண்டேன்

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார்புதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு…. நான் இடவா…

ஆராத்யா பாடல் வரிகள்

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now