Pogathe Pogathe Song Lyrics in Tamil
இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை அமையுமா..? என்றால் இல்ல என்பதே உண்மை. சிலருக்கு மிக மிக மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் ஒரு சிலருக்கு மகிழ்ச்சியற்ற வாழ்க்கை அமையும். இப்படி இரண்டு நிலையில் இருக்கின்ற நேரத்திலும் நமக்கு மிகவும் உற்சாகத்தை அளிப்பது நமது மனதிற்கு பிடித்த பாடலை கேட்பது தான். ஒரு சிலருக்கு பாடல் கேட்பது என்பது மிக மிக பிடிக்கும். ஆனால் ஒருசிலருக்கு அந்த பாடலை முழுமையாக கற்றுக்கொண்டு படுவது என்பது மிக மிக பிடிக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் நம்மில் பலருக்கும் பிடித்த ஒரு பாடலான போகாதே போகாதே பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம்.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் வரிகள்
Pogathe Pogathe Tamil Song Lyrics
—BGM—
ஆண் : போகாதே போகாதே…
நீ இருந்தால் நான் இருப்பேன்…
போகாதே போகாதே…
நீ பிரிந்தால் நான் இறப்பேன்…
ஆண் : உன்னோட வாழ்ந்த காலங்கள் யாவும்…
கனவாய் என்னை மூடுதடி…
யார் என்று நீயும் என்னை பார்க்கும் போது…
உயிரே உயிர் போகுதடி…
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து…
உந்தன் முகம் பார்ப்பேனடி…
நீ இருந்தால் நான் இருப்பேன்…
போகாதே போகாதே… ஹே…
நீ பிரிந்தால் நான் இறப்பேன்…
—BGM—
ஆண் : கலைந்தாலும் மேகம்…
அது மீண்டும் மிதக்கும்…
அது போல தானே…
உந்தன் காதல் எனக்கும்…
ஆண் : அழகான நேரம்…
அதை நீதான் கொடுத்தாய்…
அழியாத சோகம்…
அதையும் நீதான் கொடுத்தாய்…
ஆசை படத்தின் மீனம்மா அதிகாலையிலும் பாடல் வரிகள்
ஆண் : கண் தூங்கும் நேரம் பார்த்து…
கடவுள் வந்து போனது போல்…
என் வாழ்வில் வந்தே ஆனாய்…
ஏமாற்றம் தாங்கலையே…
பெண்ணை நீ இல்லாமல்…
பூலோகம் இருட்டிடுதே…
ஆண் : போகாதே போகாதே…
நீ இருந்தால் நான் இருப்பேன்…
போகாதே போகாதே…
நீ பிரிந்தால் நான் இறப்பேன்…
—BGM—
ஆண் : நடைபாதை விளக்கா காதல்…
விடிந்தவுடன் அணைப்பதற்கு…
நெருப்பாலும் முடியாதம்மா…
நினைவுகளை அழிப்பதற்கு…
உனக்காக காத்திருப்பேன்… ஓஓஹோ…
உயிரோடு பார்த்திருப்பேன்… ஓஓஹோ…
ஆண் : போகாதே போகாதே…
நீ இருந்தால் நான் இருப்பேன்…
போகாதே போகாதே…
நீ பிரிந்தால் நான் இறப்பேன்…
—BGM—
தி வாரியர் படத்தின் புல்லட் பாடல் வரிகள்
பாடலை பற்றிய குறிப்பு:
படத்தின் பெயர்: தீபாவளி
படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி: ஜெயம் ரவி, பாவனா
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
பாடகர்கள்: யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |