Railing Oligal Lyrics in Tamil
பொதுவாக பாடல் கேட்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று, பாடலை கேட்பதன் மூலம் நம் மனதிற்குள் இருக்கும் கவலைகள் நீங்கள் மனதை புத்துணர்ச்சி பெறுவதற்கு உதவுகிறது. புது பாடல் என்றால் அதை அடிக்கடி கேட்டு கொண்டு முணுமுணுத்து கொண்டே இருப்போம். புதிய படத்திலிருந்து வந்த பாடல்களை தெரிந்து கொள்வதற்கு முன்னடியெல்லாம் காசு கொடுத்து புத்தகம் வாங்கி தெரிந்து கொண்டோம். ஆனால் இன்றைய கால கட்டத்தில் மொபைலில் பாடல் வரிகளை போட்டாலே வந்து விடுகிறது. அதனால் இன்றைய பதிவில் ரயிலின் ஒலிகள் பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம்.
ரயிலின் ஒலிகள் பாடல் வரிகள்:
ஆண்: ரயிலின் ஒலிகள்
உனையே தேடுதே
அதிரும் பறையாய்
இதயம் ஆடுதே
ஆண்: உந்தன் கை வீசிடும்
பொய் ஜாடை என்னை
ஏதென் தோட்டத்தில் வீசுதே
ஆண்: உன் ஊர் தாண்டிடும்
ரெயில் பாலம் மேல்
என் பூமி முடிந்து விடுதே
ஆண்: என் தாயோடும் கூறாதா
வார்த்தைக்குள் நான் நீந்துறேன்
காந்துறேன்
பெண்: கனாக்காணும் போர்வைக்குள்
காலத்த அடைகாக்குறேன்
இருவர்: தேக்குறேன்
பெண்: மண்மேலோடும்
மழைத்தண்ணி போல்
நாளும் நிலமாறுறேன் தூருறேன்
ஆண்: பாயாகின்ற நெஞ்சுக்கு
பால்பார்வ நீ வாக்குற காக்குற
இருவரும்: கோடி வாசங்கள்
என்னை தீண்டி போனாலும்
உயிரை தீண்டாதோ உன் வாசம்
ஆண்: பூமி தீர்ந்தாலும் தீராத
இரயில் பாதை காதல் ஒன்றே
அன்பே… அன்பே…
அன்பே… அன்பே…
பாடல் பற்றிய விவரம்:
பாடல்: ரயிலின் ஒலிகள்
படம்: Blue Star
இசை: கோவிந்த் வசந்தா
வரிகள் எழுதியவர் : உமா தேவி
பாடகர்: பிரதீப்குமார், சக்திஸ்ரீ கோபாலன்
எனதுயிரே எனதுயிரே பாடல் வரிகள்
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |