சர்வதேச ஊனமுற்றோர் தினம் | International Day of Persons with Disabilities in Tamil
நண்பர்களுக்கு வணக்கம் இன்றைய பொது அறிவு பதிவில் உலக ஊனமுற்றோர் தினம் எப்போது என்று தெரிந்துக்கொள்ளலாம். ஊனமுற்றோரின் பிரச்சனைகளை உலகில் உள்ள அனைத்து மக்களும் அறிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களுக்குரிய இடத்தை நிரப்புவதில் மற்ற நபர்கள் யாரும் குறுக்கிட கூடாது. வாங்க இந்த பதிவில் சர்வதேச ஊனமுற்றோர் தினம் எப்போது என்று தெரிந்துக்கொள்ளலாம்..
உலக சுகாதார தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? |
உலக ஊனமுற்றோர் தினம் எப்போது?
விடை: உலகளவில் டிசம்பர் 3-ம் தேதி ஊனமுற்றோர் தினம் கொண்டாடப்படுகிறது.
வரலாறு:
1992-ம் ஆண்டு சர்வதேச அளவில் முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு வரை இந்த நாள் ஊனமுற்றோர்களின் தினமாக அழைக்கப்பட்டு வருகிறது.
ஒரு காலத்தில் உடலில் பாதிப்பு உள்ளவர்களை ஊனமுற்றவர்கள் என்று கூறி கேலி கிண்டல் செய்து வந்தார்கள். அப்போது முதல்வராக இருந்த மறைந்த கருணாநிதி உடல் பாதிப்பு உள்ளவர்களை இனி அரசு ஆவணங்களில் ஊனமுற்றோர்கள் என்று கூறாமல் மாற்று திறனாளிகள் என்றுதான் குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவானது மாற்று திறனாளிகளின் வாழ்க்கைக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த துவங்கியது.
மக்கள் தொகை:
ஊனமுற்றோர்களின் எண்ணிக்கையில் 65 கோடி மக்கள் தொகை இருப்பதாக உலக சுகாதார நிறுவன புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 80 வீதத்தினர் அதாவது 40 கோடிக்கு மேற்பட்டோர் மூன்றாம் உலக நாடுகளில் வாழ்கின்றனர். அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளிலுள்ள ஊனமுற்ற சிறாரில் 90 வீதத்தினர் பாடசாலைக்குச் செல்வதில்லை என்று ஐக்கிய நாடுகள் அறிக்கை (2008) கூறுகிறது.
சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் எப்போது? |
ஊனமுற்ற நிலையிலுள்ள 2 கோடிப் பெண்கள் அதனை கருவுற்ற காலத்திலோ அல்லது குழந்தைப் பிறப்பின் போதோ பெற்றுள்ளனர். ஊனம் ஒருவருடைய வாழ்க்கை காலத்தில் அல்லது பிறப்பிலையே ஏற்படலாம்.
சிறப்புகள்:
அரசு நிறுவனங்கள், அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்காக பல செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தி அவர்களுடைய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.
இந்தியாவில் டிசம்பர் 3 ஊனமுற்றோர் தினத்திற்கு சிறப்பு அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் 2001 ஆண்டு கணிப்பீட்டின் படி மொத்த மக்கள் தொகையில் 2.31 சதவிகிதமானோர் ஊனமுற்றவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 2.19 கோடி பேர் ஊனமுற்றவர்களாக உள்ளனர்.
ஊனமுற்றோர்களில் 75% கிராமப்புறங்களில் வசிக்கின்றனர் என்றும், உடல் திறன் குறைந்தவர்களில் 49% படித்தவர்களாக உள்ளார்கள். 34% பணியில் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
உலக மகள்கள் தினம் எப்போது? |
முக்கியத்துவம்:
ஊனமுற்றோர்களின் நிலையை அறிந்துகொள்வதற்காக அவர்களுக்கென்றே ஒரு சிறப்பு நாளினை அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நாளின் முக்கியத்துவம் என்னவென்றால் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயமரியாதை, கல்வி, திறன்கள், சுகாதாரம் என்று அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்பதே இந்த நாளின் முக்கிய அம்சமாக இருக்கிறது.
பொது மக்களின் நிலையை மேம்படுத்துதல் போன்று இவர்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். அவர்களுக்கும் அனைத்து துறையிலும் சம உரிமை வழங்குதல், சமூகத்தில் அவர்களின் பங்கை ஊக்குவித்தல், பொருத்தமான சீர்திருத்தங்களைச் செய்வதில் அவர்களுக்கு உதவுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |