சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் | Sarvadesa Manitha Orumaipadu Thinam
வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இது போன்ற பொது அறிவு சார்ந்த கேள்விகளை படிப்பது நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல அதை பற்றி சிந்திக்கவும் தான். அந்த வகையில் நாம் இந்த பதிவில் சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது மற்றும் ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க.
சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்:
விடை: டிசம்பர் மாதம் 20-ம் தேதி சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் கொண்டாடப்படுகிறது.
உலக அமைதி நாள் |
மனித ஒருமைப்பாடு தினம்:
- International Human Solidarity Day in Tamil: இந்த ஒருமைப்பாடு தினத்தை ஐநா பொதுச்சபை அறிமுகப்படுத்தியது. இந்த நாளின் முக்கிய நோக்கமே வறுமையை ஒழிப்பது, அமைதி, செழிப்பு, வளரும் தலைமுறையினரிடம் நிலையான முன்னேற்றம் மற்றும் மனித சமூக மேம்பாட்டிற்கு உதவுவதே ஆகும். இந்த தினம் வேற்றுமையில் ஒற்றுமை என்பதை போற்றுகிறது.
- உலகத்தில் உள்ள ஒவ்வொரு மக்களும் மனிதன் ஒற்றுமையாக இருந்தால் கிடைக்கும் நன்மையை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
- மக்களுக்கும், நாட்டுக்கும் உள்ள உறவை தீர்மானிப்பது இந்த ஒற்றுமை தான் என்பதை ஒவ்வொரு குடிமக்களும் அறிந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
- இந்த தினத்தின் முக்கிய நோக்கம் கலாச்சார சமத்துவம், மனித மற்றும் சமூக நீதியை மேம்படுத்துவது ஆகும்.
- நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கான வழிகளை கண்டறியவும், வறுமையை ஒழிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிவதற்கும் உதவும் நிகழ்ச்சிகள் டிசம்பர் 20-ம் தேதி நடத்தப்படுகிறது. இதன் மூலம் மனித ஒருமைப்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
ஒருமைப்பாட்டின் அவசியம்:
- மனதளவிலும் கொள்கையளவிலும் ஒன்றுபட்டவர்கள், மிகப்பலமான சக்தியாக விளங்குவர். ஒரு கையில் தட்டினால் ஓசை வராது, இரு கைகள் சேர்ந்தால் தான் ஓசை வரும் அதனால் தான் ஒற்றுமையே பலம் என்று கூறப்படுகிறது.
- பேரன்பும், மனிதநேயமும் இல்லாவிட்டால் இந்த உலகம் எப்போதோ அழிந்திருக்கும். சக மனிதர்களை நேசித்தல், விட்டு கொடுத்தல் போன்ற பண்புகள் ஒற்றுமை உணர்வு இருந்தால் மட்டுமே எழும்.
- இந்தியாவை மகாத்மா காந்தியும் கியூபாவை “சேகுவேராவும், பிடல்காஸ்ரோவும்” ஜேர்மனியை ஹிட்லரும், ரஸ்யாவை லெனினும், சீனாவை “ மா ஓ சேதுங்” உம் ஒன்றுபடுத்தியதன் விளைவாக இன்றைக்கு அந்த நாடுகள் உலகின் தலைசிறந்த நாடுகளாக உயர்ந்தன. ஒற்றுமையால் இந்த உலகிற்கு பல நன்மைகள் நடந்துள்ளது.
- நமக்காக படைக்கப்பட்ட சக மனிதர்கள் மீது அன்பு கொண்டு, அன்பை பரிமாறி ஒற்றுமையாக வாழ்வோம் என்றால் நம் நாடு மிகப்பெரிய வளர்ச்சியை அடைவதற்கு உதவியாக இருக்கும்.
- எனவே அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து நாடும், நாமும் செழிப்பாக வாழ உதவுவோம்.
உலக மகள்கள் தினம் எப்போது? |
தந்தையர் தினம் எப்போது? |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |