உலக காற்று தினம் கொண்டாடப்படும் நாள் | Ulaga Katru Thinam
மனிதன் உயிர் வாழ தேவையான அடிப்படையான விஷயங்கள் என்றவுடன் முதலில் மனதில் தோன்றுவது நீர், காற்று, உணவு என்றே சொல்லலாம். உணவு இல்லாமல் கூட ஒருவரால் வாழ முடியும், ஆனால் நீர், சுவாசிக்க தேவையான காற்று இவை இல்லாமல் உயிர் வாழவே முடியாது. அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் மனிதன் முதல் விலங்குகள், தாவரங்கள் வரை உயிர் வாழ்வதற்கு தேவையான உலக காற்று தினம் எப்போது கொண்டாடப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
உலக காற்று தினம் நாள்:
விடை: ஜூன் மாதம் 15-ம் தேதி காற்றின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது.
உலக காற்று நாள் விழிப்புணர்வு:
- அறிவியல் வளர்ச்சியில் அடையும் முன்னேற்றம் ஒரு விதத்தில் இந்த சமூகத்திற்கு நன்மையை கொடுத்தாலும், இன்னொரு விதத்தில் சுற்றுச்சூழலுக்கு தீமையை கொடுக்கிறது.
- தொழிற்சாலையில் இருந்து வெளிப்படும் புகையும், வாகன புகையும் காற்று மட்டுமின்றி நீரையும் சேர்த்து மாசடைய செய்கின்றன. மரங்கள் அழிக்கப்படுவதாலும் காற்றின் உற்பத்தி குறைகிறது.
உலக காற்று நாள்:
- உலகில் உள்ள விலங்குகள், தாவரங்கள், பூச்சிகள், மனிதர்கள் என அனைவரும் வாழ்வதற்கு காற்று மிகவும் முக்கியமான ஒன்று. உயிர் வாழ உதவும் இந்த காற்று சில நேரங்களில் புயல், சூறாவளி போன்றவற்றை உருவாக்கி மனிதர்களின் உயிரை பறிக்கவும் செய்கிறது, ஆனால் காற்றின் தேவை அவசியமாக உள்ளது.
Ulaga Katru Thinam:
- ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் காற்றின் ஆற்றலை கொண்டாடும் விதமாகவும், காற்றின் ஆற்றலைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் காற்றின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் ஜூன் மாதம் 15-ம் தேதி உலக காற்று தினம் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் உலக காற்று நாள் கொண்டாடப்படும் தினம்:
- நல்ல மற்றும் தூய்மையான காற்றை அனைவரும் சுவாசிக்க வேண்டுமெனில் வாகன புகை, தொழிற்சாலைகளில் வெளிப்படும் புகை போன்றவற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மரங்கள் அதிகமாக வளர்க்க வேண்டும்.
- நாட்டுக்காக இல்லையென்றாலும் தங்களின் சந்ததியினர் தூய்மையான காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காகவாது காற்று மாசடைவதை குறைக்க வேண்டும்.
- காற்று அதிகமாக மாசுபட்டுள்ள நகரங்களில் புது டெல்லி உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.
- சென்னை மெரினா கடற்கரையில் காற்றின் முக்கியத்துவதை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு முகாம் 2012-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
உலக தண்ணீர் தினம் என்று கொண்டாடப்படுகிறது தெரியுமா? |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |