உலக சிட்டுக்குருவி தினம் 2023 | Ulaga Sittukuruvi Thinam
வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் உலக சிட்டுக்குருவி தினம் எப்போது என்று பார்க்கலாம். அரசு நடத்தும் பெரும்பாலான தேர்வுகளில் இது போன்ற கேள்விகள் தான் கேட்கப்பட்டு வருகின்றன. இந்த பதிவு போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, பொது அறிவு கேள்வி பதில்களை விரும்பி படிக்கும் மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க உலக சிட்டுக்குருவி தினம் எப்போது என்று படித்தறியலாம்.
உலக சிட்டுக்குருவி தினம் எப்போது?
விடை: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்படுகிறது.
சிட்டுக்குருவி எத்தனை நாட்கள் அடைகாக்கும்:
- 12 முதல் 15 நாள் வரை பெண் சிட்டுக்குருவிகள் அடைகாக்கும்.
சிட்டுக்குருவி பற்றி எழுதுக:
- சிட்டுக்குருவி பசரீன்கள் எனப்படும் குடும்பத்தை சேர்ந்தவை. இவை வீட்டு குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊர்க்குருவிகள் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. உருவத்தில் சிறிய அளவாக இருப்பதால் சிட்டுக்குருவி என்ற பெயரை பெற்றுள்ளன.
- சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தையும், சிறிய மூக்கையும், சிறிய உருவத்தையும், சிறிய கால்களையும் கொண்டுள்ளது. 8 முதல் 24 Cm உயரத்தையும், 27 முதல் 39 கிராம் எடையையும் கொண்டுள்ளது.
- 13 ஆண்டுகள் வரை வாழும் தன்மை கொண்டது சிட்டுக்குருவிகள். இவை தெருக்களில் அதிகம் சுற்றி திரிந்தாலும், இதை செல்ல பறவைகளாக வளர்க்க முடியாது. வாழை, தென்னை நார்கள் போன்றவற்றை சேகரித்து கூடு கட்டி வாழ்கின்றன.
சிட்டுக்குருவி உணவுகள்:
- தானியங்கள், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, புழு, பூச்சிகள் போன்றவற்றை உண்ணும் தன்மை கொண்டது. 3 முதல் 5 முட்டைகள் வரை இடும், முட்டையின் நிறம் பச்சை கலந்த வெள்ளை நிறம்.
World Sparrow Day in Tamil – உலக சிட்டுக்குருவி தினம்:
- மனிதனின் பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாறுபாடும், சுற்றுச்சூழல் மாறுபாடும் சிட்டுக்குருவிகளின் இனத்தை அழித்து கொண்டு வருகின்றன.
- எரிவாயுக்களில் இருந்து வெளிவரும் Methyl Nitrate எனும் வேதிப்பொருள் வெளிப்பட்டு பூச்சியினங்கள் அழிக்கப்பட்டு குருவிகளுக்கு தேவையான உணவுகள் கிடைக்காமல் போகின்றன.
- தொலைப்பேசி டவர்கள் குருவிகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக உள்ளன. அலைப்பேசி டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு குருவியின் கருவை சிதைத்து விடுகிறது, முட்டையிட்டாலும் கரு வளர்ச்சி அடைவதில்லை. முன்பு சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதற்கு ஏற்ப கூரை வீடுகள் இருந்தன, இப்பொழுது இருக்கும் கான்க்ரீட் வீடுகளில் குருவி கூடு கட்டுவது சாத்தியமில்லை.
உலக சிட்டுக்குருவி தினம் – World Sparrow Day in Tamil:
- அழிந்து வரும் சிட்டு குருவிகளின் இனத்தை காப்பதற்காகவும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் கடந்த 2010-ம் ஆண்டு முதல் மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
- சிட்டுக்குருவிகளின் இனத்தை பாதுகாப்பதற்காக வீட்டின் முன்பாக அல்லது மாடிகளில் தண்ணீர், உணவுகளை வைக்கும் வழக்கத்தை பின்பற்றுவோம். சிட்டுக்குருவிகளின் இனத்தை பாதுகாப்போம்.
உலக சிந்தனை நாள் |
உலக தாய்மொழி தினம் எப்போது? |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |