உலக சிரிப்பு தினம் எப்போது..? ஏன் கொண்டாடப்படுகிறது..?

Advertisement

உலக சிரிப்பு தினம் எப்போது? | World Laughter Day in Tamil

அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் உலக சிரிப்பு தினம் எப்போது..? அது ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற பழமொழியை நாம் அனைவருமே கேட்டிருப்போம். சிரிப்பு என்பது மனிதர்களிடம் மட்டும் இருக்கக்கூடிய அழகான உணர்வு. மனம் விட்டு சிரித்தால் முகம் மட்டும் மலர்வதோடு இல்லாமல் உடலும் அழகாய் தெரியும். சரி வாங்க உலக சிரிப்பு தினம் எப்போது என்ற தகவலை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

சர்வதேச யோகா தினம் எப்போது

உலக சிரிப்பு தினம் எப்போது..? 

World Laughter Day

விடை: இந்த வருடம், அதாவது 2024 ஆம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி அன்று உலக சிரிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

ஆனால் எல்லா ஆண்டும் மே 5 ஆம் தேதி தான் சிரிப்பு தினமாக இருக்கும் என்றால், அது கிடையாது. அதாவது மே மாதத்தில் வரும் முதல் ஞாயிறு அன்று தான் உலக சிரிப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக சிரிப்பு தினத்தை உருவாக்கியவர் யார்:

World Laughter Day

அதாவது உலக சிரிப்பு நாள் (World Laughter Day) மே மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும். இந்த தினத்தை முதன் முதலாக ஜனவரி 10, 1988 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.

உலக சிரிப்பு தினத்தை இந்தியாவை சேர்ந்த டாக்டர் மதன் கதாரியா என்பவர் தான் 1998-ஆம் ஆண்டு உருவாக்கி வைத்துள்ளார். இவர் தான் உலகம் முழுவதும் இயங்கி கொண்டிருக்கும் லாப்டர் யோகா இயக்கத்தை தொடங்கியவர்.

முதல் உலக சிரிப்பு தின கொண்டாட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மும்பையில் ஒரே இடத்தில் கூடி மகிழ்ந்தனர். இந்தியாவுக்கு வெளியே முதல் உலக சிரிப்பு தினம் 2000-ம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.

உலக சுகாதார தினம் எப்போது கொண்டாடப்படுகிறது

உலக சிரிப்பு தினம் கொண்டாடுவதன் நோக்கம்: 

World Laughter Day

டாக்டர் மதன் கதாரியா என்பவருக்கு, ஒரு நபரின் முகபாவனைகள் அவர்களின் உணர்ச்சிகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்ற, முக பின்னூட்டக் கருதுகோள் மூலம் சிரிப்பு யோகா இயக்கத்தை ஒரு பகுதியாகத் தொடங்க தூண்டியது.

உலக சிரிப்பு தினக் கொண்டாட்டம் உலக அமைதிக்கான ஒரு நேர்மறையான வெளிப்பாடாகும். மேலும் இது சிரிப்பின் மூலம் சகோதரத்துவம் மற்றும் நட்பின் உலகளாவிய நினைவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சிரிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பொது இடங்களில் மக்கள் கூடி இந்த சிரிப்பு தினம் பெரும்பாலும் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த சிரிப்பு தினத்தின் புகழ் அதிவேகமாக வளர்ந்துள்ளது. சிரிப்பு யோகா இயக்கத்தின் மூலம் இப்போது 115 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான சிரிப்பு கிளப்புகள் உருவாக்கி உள்ளன. இப்போது உலகம் முழுவதும் சிரிப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

சிரிப்புடன் இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சிரிப்பு நம்மை மகிழ்ச்சியாகவும் புத்திசாலித்தனமாகவும் வைத்திருக்கிறது. ஆகவே இந்த அற்புதமான பரிசைக் கொண்டாடும் நாள் இந்த உலக சிரிப்பு நாள்.

மேலும் சிரிப்பு மக்களை ஒன்று சேர்க்கிறது. நாம் மற்றவர்களுடன் சிரிக்கும்போது, ​​​​அது ஒரு சிறப்பு பிணைப்பை உருவாக்கித் தருகிறது.

உலக காற்று தினம்

சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

World Laughter Day

  • நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதை விட 20 நிமிடம் வாய்விட்டு சிரித்தால் உடலும் மனதும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
  • உடல் ஆரோக்கியம் மேம்பட நன்றாக சிரிக்க வேண்டும். நாம் சிரிக்கும் போது நுரையீரல் பகுதிக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். நாம் வாய் விட்டு சிரிப்பதால் அல்சர் நோயிலிருந்து விடுபடலாம்.
  • நன்றாக வாய் விட்டு சிரிக்கும் போது ஒரு மனிதன் முழு ஆரோக்கியத்தை பெறுகிறான்.
  • அதிகமாக சிரிக்கும் போது நம்மிடம் இருக்கும் நெகட்டிவ் எனெர்ஜி எல்லாம் பறந்தோடி பாசிட்டிவ் ஆற்றல் அதிகரிக்கும்.
  • உடலில் தேவையில்லாத கொழுப்புகள் கறைந்துவிடுகிறது. ஒவ்வொரு நாளையும் சிரிப்பு தினமாக கொண்டாடி மகிழ்வோம்.

சிரிப்பு என்பது அனைவருக்கும் புரியும் மொழி. அந்த சிரிப்பை வெளிப்படுத்துவதற்கு தனியாக ஒரு நாள் எல்லாம் தேவையில்லை. ஆகவே எல்லா நாளையும் சிரிப்பு தினமாக மாற்றுவது நம் கையில் தான் உள்ளது. எனவே, மே 5 அன்று, எல்லையில்லாமல் சிரித்து மகிழ்ச்சியை பரப்புவதில் உலகத்துடன் இணைவோம் வாருங்கள்..!

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement