உலக சுகாதார தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? | World Health Day in Tamil

Advertisement

உலக சுகாதார தினம் எப்போது  | Ulaga Sugathara Dhinam Tamil

நண்பர்களுக்கு வணக்கம் இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் உலக சுகாதார தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். உலக அளவில் அனுசரிக்கப்படும் சர்வதேச நாட்களில் இதுவும் ஒன்று. சர்வேதேச நாட்கள் அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்றாக உள்ளது. வாங்க இப்பொழுது உலக சுகாதார தினம் (World Health Day in Tamil) எப்போது கொண்டாடப்படுகிறது என்பதை படித்து தெரிந்து கொள்வோம்.

உலக சுகாதார தினம் கொண்டாடப்படும் நாள்:

விடை : உலக சுகாதார தினம் ஏப்ரல் 7-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது.

  • இந்த ஆண்டு சுகாதார தினம் 07.04.2024 வருகிறது.
  • மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான சுகாதாரம் வழங்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் முக்கிய குறிக்கோளாகும். இந்த அமைப்பு ஐக்கிய சபையின் ஒரு சார்பு நிறுவனம் ஆகும். 1948-ம் ஆண்டு முதல் உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

சுகாதார பாதிப்பு:

Ulaga Sugathara Dhinam Tamil: இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அறிவியல் வளர்ச்சி ஒரு பக்கம் நன்மையை செய்தாலும், இன்னொரு பக்கம் தீமையை தருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

நிலம்:

  • World Health Day in Tamil: தொழிற்சாலை கழிவுகளாலும், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் நிலத்தில் இருக்கும் மண்ணை தோண்டி கட்டிடங்களுக்கு பயன்படுத்துவதாலும் மண்ணின் வளம் குறைந்து இயற்கை சீற்றத்திற்கு வழிவகுக்கிறது.

நீர்:

  • உலக சுகாதார தினம்: அசுத்தமான நீர் மற்றும் வேதிப்பொருள்கள் கலந்த தண்ணீரை குடிப்பதால் காலரா, பேதி மற்றும் தோல் நோய்கள் வருகின்றன. பெண்களுக்கு ஏற்படும் குழந்தைப்பேறின்மைக்கு முதல் காரணமாக இந்த வேதிப்பொருள்கள் கலந்த நீராக தான் உள்ளது.

காற்று:

  • Ulaga Sugathara Dhinam Tamil: நாம் சுவாசிப்பதற்கு ஆதரமாக விளங்குவது காற்று. ஆனால் நாம் பயன்படுத்தும் வாகனத்தில் இருந்து வெளிப்படும் புகை, தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் புகை காற்றை அசுத்தமாக்குகிறது. மாசு அடைந்த  காற்றை நாம் சுவாசிப்பதால் ஆஸ்துமா, நுரையீரல் சம்மந்தமான நோய்கள் ஏற்படுகின்றன.
  • வாகனங்கள், ஒலிபெருக்கிகள், தொழிற்சாலைகளில் இருந்து வரும் சத்தத்தால் தலைவலி, மன பதற்றம், தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
உலக காற்று தினம்

சுகாதாரத்தை பாதுகாக்க:

  • World Health Day in Tamil: மனிதன் ஆரோக்கியமாக இருப்பதற்கு  மரங்களை வெட்டுவதை தவிர்த்தல், மழை நீரை சேகரித்தல், பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதை தவிர்த்தல், புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • சுகாதாரம் என்பது உடல் அளவில் மனதளவில் அனைவரும் ஆரோக்கியமாக உள்ளார்களா என்பதை பொறுத்து அமைகிறது. நம் வீடு சுத்தமாக இருந்தால் தான் நம் நாடு சுத்தமாக இருக்கும் என்பதை உணர்ந்து மக்கள் செயல்பட்டாலே நாமும், நம் பூமியும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும்.

கருப்பொருள்:

  • World Health Day in Tamil: ஒவ்வொரு ஆண்டும் ஒரு விஷயத்தை மையமாக வைத்து சுகாதார விழிப்புணர்வு செய்யப்படுகிறது. முந்தைய ஆண்டில் சுகாதார தினத்தின் கருப்பொருள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆரோக்கியமாக வாழ்க்கை வாழ வேண்டும் என்பதை விழுப்புணர்வை ஏற்படுத்துகிறது.
ஆண்டு  கருப்பொருள் 
1995 இளம் பிள்ளை வாதத்தை உலகின்றே விரட்டுவோம்.
1996 தரமான வாழ்விற்கு நலமான நகரம்.
1997 முகிழ்த்துவரும் தொற்றுநோய்கள் தவிர்ப்போம்
1998 பாதுகாப்பான தாய்மை
1999 சுறுசுறுப்பான முதுமை இயங்கல் வேறுபாடானதே.
2000 பாதுகாப்பான குருதி ஆரம்பிக்கட்டும்.
2001 மனவளம்: விலக்கி வைப்பதை விலக்குவோம். அக்கறையுடன் கவனிப்போம்.
2002 நலவாழ்வை நோக்கி நகர்வோம்.
2003 குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க சுற்றுச் சூழலை நலம் பேணுவோம்
2004 சாலை வீதி பாதுகாப்பு
2005 ஒவ்வொரு தாயும் சேயும் தேவை என்பதை உணர்வோம் 
2006 ஒன்றுபட்டு நலவாழ்விற்காக உழைப்போம்
2007 அனைத்துலக நலவாழ்வுப் பாதுகாப்பு.

 

உலக அமைதி தினம்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement