தந்தையர் தினம் 2025 எப்போது? | Fathers Day Date 2025 in Tamil | Father’s Day 2025 Date in India
நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்..இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் தந்தையர் தினம் எப்போது என்று தெரிந்துக்கொள்ளலாம். வாழும் காலத்தில் நமக்காக வாழும் ஒரு மனிதரை கொண்டாடுவதே அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும். நாம் வளரும் போது நம்முடைய தாய் நம்மை செல்லமாக வளர்ப்பார்கள். ஆனால் தந்தை மிகக் கண்டிப்பானவராக இருப்பார். பெரும்பாலும் தந்தைக்கு வேலை நெருக்கடி போன்ற காரணங்களால் தந்தை நம்முடன் நேரம் செலவிடுவதே குறைவுதான். இதன் காரணமாக நாம் தந்தை என்றாலே ஒரு வெறுப்புடன் தான் அவரை பார்ப்போம். ஆனால் தந்தையின் கண்டிப்பு தான் நம்மை சிறப்பாக வழி நடத்தியது என்பதை நாம் தந்தையான பிறகே உணர்வோம். அப்படிப்பட்ட அப்பாக்களுக்காக தந்தையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
தந்தையர் தினம் எப்போது? | Happy Father’s Day 2025 Date in Tamil:
விடை: 2025 ஆம் ஆண்டில் தந்தையர் தினம் ஜூன் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது.
தந்தையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் வரும் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அன்றும் மற்ற நாடுகளில் பிற நாட்களிலும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
Is Father’s Day The Same Date Every Year:
தந்தையர் தினம் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் வரும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை வருவதால் ஒவ்வொரு வருடமும் தேதி மாறுபடும். அதேபோல், உலகில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நாளில் கொண்டாடப்படுகிறது. எனவே, நீங்கள் வசிக்கும் இடத்தை பொறுத்து தந்தையர் தினம் தேதி மாறுபாடும். இந்தியாவில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
தந்தையர் தினம் சிறப்பு:
ஒரு குழந்தையை தாய் கருவில் பத்து மாதம் சுமந்து பெற்றெடுப்பாள். அந்த குழந்தையை தோள்மீது சுமந்து வளர்ப்பவர் தந்தை தான். தன்னுடைய அன்பினை கூட குழந்தையிடம் அதட்டலாக வெளிப்படுத்துவது தான் தந்தையின் சிறப்பு. தன் கஷ்டங்களை கூட வெளிப்படுத்த நேரமில்லாமல் வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டிருப்பவர்தான் அப்பா. தான் கஷ்டப்பட்டாலும் தன் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என அயராது உழைப்பவர்தான் அப்பா.
நம்மை படிக்க வைத்து ஆளாக்கிய தந்தைக்கு நாம் செய்யும் கைமாறு என்ன தெரியுமா? இவனுடைய தந்தை இந்த அருமையான மகனைப் பெறுவதற்கு எத்தகைய கடும் தவத்தை செய்தானோ என்று மற்றவர்கள் கூறும் அளவிற்கு நாம் நம்முடைய தந்தைக்கு மரியாதையை தேடித்தர வேண்டும் என்று வள்ளுவரே கூறியுள்ளார்.
இத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு தனக்காக வாழாமல் தன் குடும்பத்திற்காகவும் பிள்ளைகளுக்காகவும் உழைக்கும் தந்தையை அவரது இறுதி காலங்களில் அவரை குழந்தை போல் பார்த்துக்கொள்வது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமை. முதியோர் இல்லத்தில் பெற்றோர்களை விட்டு விடாதீர்கள்.
ஒவ்வொரு குழந்தைக்கும் தன்னுடைய தந்தை தான் முதல் ஹீரோ அல்லவா..! தன்னுடைய வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டத்தினை தன் குழந்தைகள் படக்கூடாது என்று எண்ணி பல தியாகங்களை செய்திருப்பவர் தந்தை. அவர்களுக்கு அன்றைய தினத்தில் எந்த பரிசுகளையும் வழங்க முடியவில்லை என்றாலும் தந்தையுடன் நேரத்தினை செலவிடுங்கள். ஒருவர் இருக்கும் போதே அவர்களை அன்பாக பார்த்து கொள்ளுங்கள். போன பிறகு ஒன்றுமே பறக்க முடியவில்லையேஎன்று கவலை அடைவதில் எந்த புராஜனமும் இல்லை. அதற்காக கோடி ரூபாய் கடன் வாங்கி பார்த்து கொள்ள வேண்டும் என்று இல்லை, உங்களுடைய உண்மையான அன்பை காட்டினாலே போதுமானது.
தந்தையர் தினம் என்ற அந்த நாள் உணர்வுபூர்வமான நாள் என்பது அனைவராலும் மறக்க முடியாத நாள். தந்தையுடன் இருப்பவர்கள் அவர்களுக்கு பிடித்த பொருள்களை வாங்கி தந்தையர் தினத்தன்று அவர்களுக்கு பரிசாக கொடுத்து அவர்களை சந்தோசப்படுத்துங்கள்.. குடும்பத்திற்காக தன்னையே அர்ப்பணித்து வாழும் ஒவ்வொரு தந்தையருக்கும் எமது மனமார்ந்த தந்தையர் தின வாழ்த்துக்கள்..
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |