தமிழகத்தின் ஆக்ஸ்போர்ட் என்ன? | Tamilagathin Oxford Name in Tamil
வணக்கம் நண்பர்களே.. இன்றைய பொது அறிவு பகுதியில் தமிழகத்தின் ஆக்ஸ்போர்ட் எது என்று தெரிந்துக்கொள்ளலாம். பொது அறிவு சம்பந்தமான கேள்வி பதில்களை நாம் பள்ளி படிக்கும் பருவத்திலிருந்து படிப்பதை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் போது நாம் படித்து வைத்துள்ள பொது அறிவு விஷயங்கள் நமக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் நாம் இந்த பதிவில் தமிழகத்தின் ஆக்ஸ்போர்ட் எது என்று தெரிந்துக்கொள்ளுவோம் வாங்க..
தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது? |
தமிழகத்தின் ஆக்ஸ்போர்ட் எது?:
விடை: தமிழகத்தின் ஆக்ஸ்போர்ட் என்று அழைக்கப்படுவது பாளையங்கோட்டை.
பாளையங்கோட்டை பற்றி சிறு குறிப்பு:
- பாளையங்கோட்டை என்பது திருநெல்வேலி மாநகராட்சியின் ஒரு பகுதியாகும்.
- திருநெல்வேலி மாநகராட்சியாக உருவாக்கப்படுவதற்கு முன்பாக இந்த பகுதி தனி நகராட்சியாகச் செயல்பட்டு வந்தது.
பாளையங்கோட்டையின் சிறப்பு:
- இந்த ஊரில் கல்விக்கு பெயர் போன பல மிகப்பெரிய கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது.
- தமிழ்நாட்டில் முதல் முறையாக பார்வையற்றவர் மற்றும் காதுகேளாதோர் பள்ளி துவங்கப்பட்டதால் இது தமிழகத்தின் “ஆக்ஸ்போர்ட்” என்று பாளையங்கோட்டை பெருமையுடன் அழைக்கப்படுகிறது.
- இங்குள்ள பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை மிகவும் பழைமை வாய்ந்தது மட்டுமல்லாமல் மிகவும் பெயர் பெற்றது.
- இங்குதான் வ.உ.சி நினைவு விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது.
- அங்கு மிகப்பெரிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த மருத்துவமனையில் அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பாளையங்கோட்டை மக்கள் தொகை:
2011-ம் ஆண்டின் படி மக்கள் தொகை கணக்கெடுப்பு:
- மக்கள்தொகை = 91,176
- ஆண்கள் = 45,240
- பெண்கள் = 45,936
- குடும்பங்கள் = 23,324
- எழுத்தறிவு = 83.5%
- பாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, 1,015 பெண்கள்
- 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 9918
- குழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு, 972 பெண் குழந்தைகள்
- பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் = 21,775 மற்றும் 373
சமயம்:
- இந்துக்கள் = 81.14%
- இசுலாமியர்கள் = 2.79%
- கிறித்தவர்கள் = 15.99%
- பிறர்= 0.07%
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது? |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |