தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது? | Tamil Nadu Nerkalanjiyam in Tamil

Tamil Nadu Nerkalanjiyam in Tamil

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்ன? | Tamilnattin Nerkalanjiyam

பொது அறிவு கேள்விகள் பெரும்பாலும் தமிழ்நாட்டை பற்றி தான் இருக்கின்றன. வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அதைப் போன்ற ஒரு கேள்விதான் தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது?. அந்த வகையில் நாம் இந்த பதிவில் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தையும், அந்த ஊர் பற்றிய சில சிறப்புகளையும் பார்க்கலாம் வாங்க.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது? 

விடை: தஞ்சாவூர் மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது, அது ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?

 • Tamilnattin Nerkalanjiyam: காவேரி நதி நீா் பாய்ந்து வளம் சோ்ப்பதாலும், விவசாயம் முதன்மைத் தொழிலாக இருப்பதால் தஞ்சாவூா் மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. தஞ்சாவூரில் விவசாயத்திற்கு என குறுவை, சம்பா, தலாடி என மூன்று பருவங்கள் உள்ளது.
 • இங்கு உள்ள மக்கள் விவசாயத்தை தொழிலாக செய்து வருகின்றனர்.
 • தமிழக மக்களின் நீர் மேலாண்மைக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது தஞ்சாவூரில் அமைந்துள்ள காவேரி. இந்த ஊரில் கலைகள், கட்டிடக்கலை, கோவில்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை.
 • தஞ்சாவூரை களப்பிரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் போன்ற பல அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர்.
 • தஞ்சாவூர் நகராட்சி ஏப்ரல் 10-ம் தேதி 2014-ம் ஆண்டு தமிழ்நாட்டின் 12-வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது?

தஞ்சாவூர் பெயர் காரணம்:

 • பாரம்பரியமிக்க தொன்மையான நகரங்களில் ஒன்று தஞ்சாவூர். தஞ்சாவூரின் வளமையை பாதுகாத்து வந்த தனஞ்சய முத்தரையர் என்பவரின் பெயரில் முதல் பகுதியில் உள்ள தனஞ்சய என்ற பெயர் தான் வைக்கப்பட்டது. பிற்காலத்தில் அந்த பெயரே மருவி தஞ்சாவூர் என்றாயிற்று. இந்த நகரம் 8-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.

Tamilnattin Nerkalanjiyam:

 • தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்: வெளிநாட்டு மக்கள் ஆச்சரியபடும் அளவிற்கு தஞ்சையில் இருக்கும் பெரிய கோவில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இக்கோயிலை கட்டியவர் ராஜராஜசோழன் ஆவார். இக்கோயில் பிரகதீஸ்வரர் கோவில், பெருவுடையார் கோயில் என்றும் தஞ்சை பெரிய கோயில் என்றும் அழைக்கப்படும்.
 • அக்காலத்தில் இரண்டு மூன்று தளங்களை வைத்துதான் கோவில்கள் கட்டப்பட்டு வந்தன. ஆனால் தஞ்சைப்பெரிய கோவில் தான் முதன் முதலில் 15 தளங்கள் வைத்து கட்டப்பட்டது. இந்த கோவிலில் இருக்கும் பெரியநந்தி ஒரே கல்லால் செதுக்கப்பட்டது.
தஞ்சை பெரிய கோவில் குறிப்புகள்

சிறப்புகள்:

 • சோழர்களின் தலைநகரமாக இருந்தது.
 • உலக புகழ் பெற்ற கோவிலான பெரியகோவில் உள்ளது.
 • தமிழுக்காக முதன் முதலில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் உள்ளது.
 • உலக புகழ் பெற்ற தலையாட்டி பொம்மை, வீணைகள், ஓவியங்கள் போன்றவை உள்ளன.
 • சுற்றி பார்ப்பதெற்கென விஜயநகர கோட்டை, தஞ்சாவூர் அரண்மனை, சரஸ்வதி மஹால் நூலகம், பூண்டி மாதா கோயில், இராஜராஜன் மணி மண்டபம், சுரங்கப்பாதை போன்ற பல இடங்கள் தஞ்சாவூரில் உள்ளது.
 • அதிக அளவில் கோயில்கள் உள்ள மாவட்டமாக திகழ்கிறது.
தமிழகத்தின் ஏரி மாவட்டம் எது?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil