நெடுநல்வாடை TNPSC குறிப்புகள்..!

Advertisement

நெடுநல்வாடை TNPSC குறிப்புகள்..! | Nedunalvaadai Nool Kurippu in Tamil

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று தான் நெடுநல்வாடை நூலை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். நெடுநல்வாடை என்பது தமிழ் இலக்கிய நூல்களில் மிகவும் முக்கியமான நூலாகும். TNPSC தேர்வுகளில் அதிகளவு நெடுநல்வாடை நூலில் இருந்து வினா விடைகள் கேட்கப்படுகிறது. ஆகவே நெடுநல்வாடை நூல் பற்றிய மிகவும் முக்கியமான குறிப்புகளை இந்த பதிவில் பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்து பெயன்பெறுங்கள்.

நெடுநல்வாடை – Nedunalvaadai:

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான இந்நூல் ஆசிரியப்பாவால் ஆன 188 அடிகளைக் கொண்டது. நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற கூதிர்ப்பாசறையின்கண் இருக்கும் தலைவனுக்கு இஃது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.

இதையும் படியுங்கள் ஆசாரக்கோவை

  • இந்த நூலில் அடி – 188
  • நெடுநல்வாடை பாட்டுடைத் தலைவன் யார்? – தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆவார்.
  • இந்நூலில் பயிலும் பா = ஆசிரியப்பா
  • இந்நூல் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று
  • பத்துப்பாட்டில் ஆகம, புறமா என்று கருது வேறுபாட்டைத் தோற்றுவித்த ஒரே நூல் நெடு நல்வாடை ஆகும்

நெடுநல்வாடை சிறப்பு பெயர்கள்:

  • புனையா ஓவியம்
  • சிற்பப்பாட்டு
  • தமிழ்ச்சுரங்கம்
  • கோல நெடுநல்வாடை

நக்கீரர்:

  • இப்பாடலை எழுதியவர் மதுரைக் கணக்காயனர் மகனார் நக்கீரன் ஆவார்
  • இப்பாடல் இடம்பெற்ற நூல் = நெடு நல்வாடை
  • இவரின் இயற் பெயர் = கீரன்
  • இவர் இயற்றிய மற்றொரு நூல் = திருமுருகாற்றுப்படை. இந்நூலின் வேறு பெயர் “புலவராற்றுப்படை” மற்றும் “முருகு”.
  • இவர் பாடிய பாடல்கள் அகநானூறு முதலிய தொகைநூல்களிலும் உள்ளது.
  • இவர் அகநானூற்றில் 17 பாடல்கள், குறுந்தொகையில் 8 பாடல்கள், நற்றிணையில் 7 பாடல்கள் மற்றும் புறநானூற்றில் 3 பாடல்களை பாடியுள்ளார்
  • திருவள்ளுவ மாலையில் “தானே முழுதுணர்ந்து” எனும் வெண்பாவை பாடியுள்ளார்
  • தமிழின் முதல் உரையாசிரியர் நக்கீரரே
  • தமிழின் முதல் உரை நூல் = இறையனார் களவியல் உரை
  • இறையனார் களவியலுக்கு நிறைய பேர் உரை எழுதி உள்ளனர். அவற்றில் சிறந்தது நக்கீரரின் உரையே என்று நிரூபித்தவர் = உப்பூரிக் குடிகிளார் மகனார் உருத்திரசன்மனார் ஆவார்

நக்கீரரின் சிறப்பு

  • கடைசங்கதின் தலைமைப் புலவர் நக்கீரர் ஆவார்.
  • இவர் நல்லிசைப்புலவர் ஆவார்
  • இறையனார் களவியலுக்கு சிறந்த உரை எழுதி உள்ளார்
  • இறைவன் சிவபெருமான் எழுதிய “அகப்பொருள் (அ) களவியல்” என்னும் நூலிற்கு இவர் உரை எழுதினார். உரையின் சிறப்பினால் இந்நூல் “இறையனார் களவியல் உரை” எனப்படுகிறது
  • தமிழின் முதல் உரையாசிரியர் நக்கீரரே
  • சிவப்பிரகாசர் = “இலக்கியப் புலவர் சிங்கம்” எனப் போற்றுகிறார்
  • கச்சியப்ப புலவர் = “பொய்யற்ற கீரன்” என்கிறார்

இதையும் படியுங்கள்  மூதுரை பாடல்

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement