வேகமாக வளரும் மரம் எது? | Which is Fast Growing Plant
நண்பர்களே வணக்கம் இன்று பொது அறிவு பதிவில் வேகமாக வளரக்கூடிய மரம் எது அதனை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். பொதுவாக மரங்கள் என்றால் சில வருடங்களுக்கு பிறகுதான் ஒரு கிளைகளை விடும். அதன் பின் அது வளர்ந்து வருவதற்கு மூன்று அல்லது நான்கு வருடங்கள் ஆகும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு சில தாவரங்கள் மரங்கள் மட்டும் மிகவும் வேகமாக வரக்கூடியதா உள்ளது அதனை இந்த பதிவில் தெளிவாக படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!
இந்தியாவின் தேசிய மரம் எது? |
வேகமாக வளரும் மரங்கள்:
வேகமாக வறறக்கூடிய மரங்கள் என்றால் முதலில் ஞாபகம் வருவது மூங்கில் தான். அதன் பின் ஆலமரம், அரச மரம், பூவரசு மரம், அத்தி மரம் போன்ற மரங்களை வளர்ப்பார்கள்.
மிக வேகமாக வளரும் மரம்:
- அதிவேகமாக வளரக்கூடிய மரம் மூங்கில் தான். மூங்கில் மரத்தை வார்ப்பது மிகவும் நல்லது. இது வேகமாகவும் வரரும் பெரிய உயரத்தையும் கொண்டுள்ளது. முகில் வீடு கட்டுவதற்கும். புல்லாங்குழல். மர கைவினை பொருட்கள் செய்வதற்கும். விளையாட்டு பொருட்கள் செய்வதற்கும் மிகவும் உதவியாக உள்ளது. அது மட்டும் இல்லை மூங்கிலில் உடல் வியாதிகளுக்கும் பல நோய்களுக்கும் மருந்தாக உதவுகிறது.
- உலகில் 1580 மூங்கில் இனங்கள் காணப்படுகிறது. இந்தியாவில் இதன் வகைகள் மாற்றுப்பட்ட மூங்கில் மரங்கள் வட மாநிலங்களில் அதிகளவு காணப்படுகிறது.
- கேரளாவில் 22 மர வகைகள் உள்ளது. உலகில் பாதுகாப்பு, வளர்ப்பு அதனை ஊக்கப்படுத்துதல் அதன் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் பணிகளில் பல அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.
- கேரளாவில் உள்ள ஜவஹல்லர் பூங்காவில் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
- அங்கு 78 வகை மூங்கில்கள் வளர்கின்றன. இந்த மூங்கில் குறைவான எடை வலிமை உறுதித்தன்மை ஆகிய குணங்கள் மூங்கில்களின் பயன்பாட்டிற்கு முக்கியமாக விளங்குகிறது.
- குறைவான முதலீடு, நீண்ட நாள் உழைக்கும் தன்மை அதனால் இதனை அனைவரும் ஏழைகளின் மரம், பச்சை தங்கம், புத்திசாலி மரம், இருபத்தி ஒன்றாம் நுற்றாண்டின் மரம் என்று அழைக்கப்படுகிறது.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |