இந்திய மாநிலங்களும் அதன் நடனங்களும்..!

Advertisement

இந்திய மாநிலங்களின் நடனங்கள் – Different dance forms of india with states pdf

இந்தியாவில் நடனம் என்பது பல வகை நடனங்களைக் கொண்டுள்ளது. பொதுவாக பாரம்பரியம் அல்லது நாட்டுப்புறம் என இது வகைப்படுத்தப்படுகிறது. இந்திய கலாச்சாரத்தின் பிற அம்சங்களைப் போலவே, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு வகையான நடனங்கள் தோன்றி, உள்ளூர் மரபுகளின்படி வளர்ந்தன. மேலும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் கூறுகளை ஊக்கப்படுத்தின.

இந்தியாவில் கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய அகாதமியான சங்கீத நாடக அகாதமி, எட்டு பாரம்பரிய நடனங்களை இந்திய பாரம்பரிய நடனங்களாக அங்கீகரிக்கிறது. மற்ற நிறுவங்களும் அறிஞர்களும் இதை அங்கீகரிக்கின்றனர். சரி இங்கு இந்திய மாநிலங்களும் அதன் நடனங்களும் என்னென்ன என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

Different Dance Forms of India With Sates pdf

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நாட்டியங்கள் பரதநாட்டியம்,
தெருக்கூத்து, கும்மி,
கோலாட்டம், காவடியாட்டம்,
கரகாட்டம், பொம்மலாட்டம்,
புலியாட்டம், ஒயிலாட்டம்
கேரளாவின் புகழ் பெற்ற நாட்டியங்கள் கதகளி, ஒட்டன்
துள்ளல், மோகினி ஆட்டம்,
சவிட்டு நாடகம்,,
கூடியாட்டம், முடியேட்டு, தெய்யம், கைகொட்டிகாளி
பஞ்சாப்பின் புகழ் பெற்ற நாட்டியங்கள் பஞ்சான், கித்தா
ஜம்மு காஷ்மீர் புகழ் பெற்ற நாட்டியங்கள் ரவுஃப், ஹிகாட், மந்த்ஜாஸ், குட் தண்டி நாச், டமாலி
குஜராத் புகழ் பெற்ற நாட்டியங்கள் கார்பா, தாண்டியா, பாவை, திப்பானி ஜூரியன்
ராஜஸ்தான் புகழ் பெற்ற நாட்டியங்கள் கூமர், சாக்ரி, கனகோர், ஜூலன் லீலா, ஜூம்ஆ, சூசினி, கபால், கல்பேலியா.
உத்திரபிரதேசம் புகழ் பெற்ற நாட்டியங்கள் ராசலீல, சோலியா, நௌதாங்கி, ரஸ்லீலா, கஜ்ரி, ஜோரா, சப்பேலி, ஜைதா.
அசாம் புகழ் பெற்ற நாட்டியங்கள் புகழ் பெற்ற நாட்டியங்கள் பிஹு, பிச்சுவா, நட்பூஜா, மகாராஸ், காளிகோபால், பகுரும்பா, நாகா நடனம், கேல் கோபால், தபல் சோங்லி, கேனோ, ஜுமுரா ஹோப்ஜானாய்
ஆந்திரப் பிரதேசம் புகழ் பெற்ற நாட்டியங்கள் குச்சிப்புடி, பாமகல்பம், லம்பாடி, திம்சா, கோலாட்டம், புட்ட பொம்மாலு, விசாலினி நாட்டியம், வீர நாட்டியம், டப்பு, தப்பெடா குல்லு, லம்படி
பீகார் புகழ் பெற்ற நாட்டியங்கள் புகழ் பெற்ற நாட்டியங்கள் ஜடா-ஜதின், பகோ-பக்கெய்ன், பன்வாரியா, சாமா சக்வா, பிதேசியா.
ஹரியானா புகழ் பெற்ற நாட்டியங்கள் புகழ் பெற்ற நாட்டியங்கள் ஜுமர், ஃபாக், டாப், தமல், லூர், குக்கா, கோர், ககோர்.
சத்தீஸ்கர் புகழ் பெற்ற நாட்டியங்கள் புகழ் பெற்ற நாட்டியங்கள் கவுர் மரியா, பந்தி, ரவுத் நாச்சா, பாண்ட்வானி, வேதமதி, கபாலிக், பர்தாரி சரித், சந்தானி.
அருணாசலப் பிரதேசம் புகழ் பெற்ற நாட்டியங்கள் புய்யா, சலோ, வாஞ்சோ, பாசி கொங்கி, போனுங், போபிர், பர்டோ சாம்.
கோவா புகழ் பெற்ற நாட்டியங்கள் தரங்கமெல், ஹோலி, தேக்னி, ஃபுக்டி, ஷிக்மோ, கோடே, மோட்னி, சமயி நிருத்யா, ஜாகர், ரன்மலே, கோன்ஃப், டோன்யா மெல்.
மிசோரம் புகழ் பெற்ற நாட்டியங்கள் செராவ் நடனம், குல்லாம், சைலம், சாவ்லக்கின், சாவ்ங்லைசான், ஜாங்டலாம், பர் லாம், சர்லம்கை/சோலாக்கியா, ட்லாங்லாம்.
இமாச்சலப் பிரதேசம் புகழ் பெற்ற நாட்டியங்கள் ஜோரா, ஜாலி, சர்ஹி, தாமன், சபேலி, மஹாசு, நாட்டி, டாங்கி.
ஜார்கண்ட் புகழ் பெற்ற நாட்டியங்கள் அல்காப், கர்மா முண்டா, அக்னி, ஜுமர், ஜனனி ஜுமர், மர்தானா ஜுமர், பைகா, பகுவா, ஹண்டா நடனம், முண்டாரி நடனம், சர்ஹுல், பராவ், ஜிட்கா, டங்கா, டோம்காச், கோர நாச்.
கர்னாடக புகழ் பெற்ற நாட்டியங்கள் யக்ஷகன், ஹுத்தாரி, சுக்கி, குனிதா, கர்கா, லம்பி.
மகாராஷ்டிரா புகழ் பெற்ற நாட்டியங்கள் லாவனி, நகாடா, கோலி, லெசிம், கஃபா, தஹிகலா தசாவ்தார் அல்லது போஹாடா, தங்கரி கஜா.
மத்திய பிரதேசம் புகழ் பெற்ற நாட்டியங்கள் ஜவாரா, மட்கி, ஆடா, கடா நாச், புல்பதி, கிரிடா டான்ஸ், செளலர்கி, செலபடோனி, மாஞ்ச்.
மணிப்பூர் புகழ் பெற்ற நாட்டியங்கள் டோல் சோலம், தாங் தா, லை ஹரோபா, பங் சோலோம், கம்பா தைபி, நுபா நடனம், ரஸ்லீலா, குபக் இஷெய், லௌ ஷா.
மேகாலயா புகழ் பெற்ற நாட்டியங்கள் கா ஷாட் சுக் மைன்சீம், நோங்க்ரெம், லாஹோ.
நாகலாந்து புகழ் பெற்ற நாட்டியங்கள் ரங்மா, மூங்கில் நடனம், ஜெலியாங், ன்சுயிரோலியன்ஸ், கெதிங்லிம், டெமாங்னெடின், ஹெடலியூலி.
ஒடிசா புகழ் பெற்ற நாட்டியங்கள் ஒடிசி (கிளாசிக்கல்), சவாரி, குமாரா, பைங்கா, முனாரி, சாவ்.
சிக்கிம் புகழ் பெற்ற நாட்டியங்கள் சூ ஃபாட் நடனம், சிக்மாரி, சிங்கி சாம் அல்லது ஸ்னோ லயன் நடனம், யாக் சாம், டென்சாங் க்னென்ஹா, தாஷி யாங்கு நடனம், குகுரி நாச், சுட்கே நாச், மருனி நடனம்.
திரிபுரா புகழ் பெற்ற நாட்டியங்கள் ஹோஜாகிரி.
உத்தரகாண்ட் புகழ் பெற்ற நாட்டியங்கள் கர்வாலி, குமாயுனி, கஜாரி, ஜோரா, ரஸ்லீலா, சப்பேலி.
மேற்கு வங்கம் புகழ் பெற்ற நாட்டியங்கள் கதி, கம்பீரா, தாலி, ஜாத்ரா, பவுல், மராசியா, மஹால், கீர்த்தன்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றவர்களின் பட்டியல்..!

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement