Tamilnattin Manila Palam
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் நம் தமிழ்நாட்டின் மாநில பழம் எது என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நம் தமிழ்நாட்டிற்கு என்று பல சின்னங்கள் இருக்கின்றன. அதை பற்றி நாமும் நம் பதிவின் வாயிலாக தினமும் ஒவ்வொன்றாக அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் Tamilnattin Manila Palam எது என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம்.
பொதுவாக நாம் இவ்வுலகில் நடக்கும் செய்திகளையும் உலக நடப்புகளையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதுபோல படிக்கும் காலத்திலும், அரசு தேர்வுகளிலும் இதுபோன்ற கேள்விகள் அதிகமாக கேட்கப்படுகின்றன. அதனால் நாம் இன்று தமிழ்நாட்டின் மாநில பழம் எது என்பதை பற்றியும், அதன் வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தமிழ்நாட்டின் மாநில பழம் எது..?
நம் தமிழ்நாட்டிற்கு என்று பல மாநில சின்னங்கள் இருக்கின்றன. அப்படி தமிழ்நாட்டின் மாநில சின்னங்கள் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது தெரியுமா..
சரி நம் தமிழ்நாட்டின் மாநில பழம் பலாப்பழம் ஆகும்.இது முக்கனிகளில் ஓன்று ஆகும். இந்த பலாப்பழமானது சுவையிலும், நறுமணத்திலும் அனைவரையும் மயக்கும் மற்றும் கவர்ந்து இழுக்கும் தன்மையை கொண்டுள்ளது.
என்ன தான் மா, பலா, வாழை என்று முக்கனிகளை நாம் பழந்தமிழகம் கொண்டாடி இருந்தாலும், பலாப்பழத்தை தான் மாநில பழமாக அரசு அறிவித்துள்ளது.
பலாப்பழத்தை பற்றிய சில தகவல்கள்:
பலாப்பழம் என்பது ஆர்டோகார்பஸ் ஹீட்டோரோஃபில்லஸ் அத்தி , மல்பெரி மற்றும் ரொட்டிப்பழம் குடும்பத்தை சேர்ந்த ஒரு வகை மரமாகும். இந்த பலாப்பழமானது மிகப்பெரிய மரத்தின் பழமாகும்.
இந்த பலாப்பழமானது 55 கிலோ (120 பவுண்டுகள்) எடை, 90 செமீ (35 அங்குலம்) நீளம் மற்றும் 50 செமீ (20 அங்குலம்) விட்டத்தை கொண்டதாக இருக்கும்.
பலா மரம் வெப்பமண்டல தாழ்நிலங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. இது இந்தியா, பங்களாதேஷ், இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் மழைக்காடுகள் உட்பட உலகின் வெப்பமண்டல பகுதிகளில் பரவலாக பயிரிடப்படுகிறது.
பலாப்பழம் என்ற சொல் போர்த்துகீசிய ஜாக்காவிலிருந்து வந்தது. மேலும் இது மலையாள மொழிச் சொல்லான சக்கா என்பதிலிருந்து பெறப்பட்டது என்றும் கூறுகிறார்கள்.
மேலும் இந்த பலாப்பழமானது பங்களாதேஷின் தேசிய பழமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், கேரளாவின் மாநில பழமாகவும் தமிழ்நாட்டின் மாநில பழமாகவும் இருக்கிறது.
தமிழ்நாட்டின் 10 சுவாரஸ்யமான தகவல்கள்
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |