தமிழ்நாட்டின் மாநில மரம் | Tamilnattin Manila Maram

Tamilnattin Manila Maram

தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

அறிவு என்றாலே நாம் அனைத்தையும் அறிந்து கொள்வது தான். அதில் பொது அறிவு என்பது நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், உலக நடப்புகளையும் தெரிந்து கொள்வது அவசியம். பொது அறிவு சார்ந்த விஷயங்களை நாம் தெரிந்து கொள்வதால் நம்முடைய அறிவு மேம்படுகிறது, மேலும் நாம் அரசு வேலைகள் கிடைப்பதற்காக நடத்தப்படும் பெரும்பாலான தேர்வுகளில் பொது அறிவு சார்ந்த கேள்விகள் தான் கேட்கப்படுகிறது. அப்படி பொது அறிவு சார்ந்த கேள்விகளில் ஒன்றான அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தமிழ்நாட்டின் மாநில மரம் எது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

விடை: தமிழ்நாட்டின் மாநில மரம் பனை மரம் 

தமிழ்நாட்டின் மாநில மரம்:

  • இது மரம் என்று அழைக்கபட்டாலும் இது ஒரு புல் வகையை சார்ந்தது. இது வறட்சியான நிலப்பரப்பிலும் வளர கூடியது. இந்த மரம் 30 முதல் 40 அடி உயரம் வரை வளரும்.
  • இந்த மரம் 120 ஆண்டுகள் வளர கூடியது. இந்தியாவில் உள்ள பனை மரங்களில் 50% தமிழ்நாட்டில் உள்ளது. பண்டைய காலத்தில் இந்த மரத்தின் பெயர் போந்தை.

தமிழ்நாட்டின் மாநில மரம் குறிப்பு எழுதுக:

  • பனை மரம் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, மியான்மர், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளிலும், காங்கோ போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் உள்ளது.
  • பனையில் ஆண் பனை, பெண் பனை என இருவகை உண்டு. ஆண் பனையில் பூ மட்டுமே பூக்கும், பெண் பனையில் பூ, காய் என இரண்டும் காய்க்கும்.
  • பனை மரத்தில் இருக்கும் ஒவ்வொரு பகுதியும் அற்புத பலன்களை தரக்கூடியது அதனால் இது கற்பகத்தரு என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் மாநில மரம் குறிப்பு வரைக:

  • இந்த மரத்தில் இருந்து பனங்கிழங்கு, நுங்கு, பனை வெல்லம், பனங்கற்கண்டு, பதநீர் போன்ற உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன. இதனுடைய இலைகளை விசிறி செய்வதற்கும், கூரை, பாய் மற்றும் பனை மரம் வீடு கட்டவும் பயன்பட்டு வருகிறது.
  • இப்பொழுது நாம் எழுதுவதற்கு காகிதம் பயன்பட்டு வருகிறது, பழைய காலத்தில் பனை ஓலை எழுதுவதற்கு பயன்படுத்தபட்டது. இந்த பனை ஓலை 100 ஆண்டுகள் வரை அழியாமல் இருக்கும்.
  • இது போன்று பனை மரத்தின் பயன்கள் எண்ணற்றவை, இது பண்டைய காலத்தில் மட்டும் இன்றி இப்பொழுது உள்ள மக்களுக்கும் பயன்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் சின்னங்கள்:

  1. தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது?

விடை: வரையாடு

2. தமிழ்நாட்டின் மாநில பறவை எது?

விடை: மரகதப்புறா

3. தமிழ்நாட்டின் மாநில மலர் எது?

விடை: செங்காந்தள்

4. தமிழ்நாட்டின் மாநில பழம் எது?

விடை: பலா

5. தமிழ்நாட்டின் மாநில பண் எது?

விடை: தமிழ்த்தாய் வாழ்த்து

6. தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?

விடை: கபடி

7. தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?

விடை: பரதநாட்டியம்

8. தமிழ்நாட்டின் மாநில வண்ணத்துப்பூச்சி எது?

விடை: மலைச்சிறகன் எனும் தமிழ் மறவன் எனும் வண்ணத்துப்பூச்சி

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது?
தமிழ்நாட்டின் சிறப்புகள்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil