தமிழகத்தின் மாநில விலங்கு எது தெரியுமா..?

Advertisement

Tamilnattin Manila Vilangu

வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்..! பொது அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக தினமும் செய்தித்தாள், தொலைக்காட்சி போன்றவை பார்த்து தெரிந்து கொள்வோம். பள்ளியில் படிக்கும் போது GK என்பது தனி பாடப்பிரிவாக இருந்தது. அதன் மூலமாக நாம் தினமும் பொது அறிவை வளர்த்து வந்தோம்.

அதுமட்டுமில்லமால் இந்தியாவின் தேசிய விலங்கு, பறவை எது என்று கேட்டால் உடனே சொல்லி விடுவோம். ஆனால் தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது என்று கேட்டால் கொஞ்சம் யோசிப்போம். இல்லையென்றால் ஸ்மார்ட்போனில் உள்ள Google-லில் சர்ச் செய்வோம். அதனால் தான் இந்த பதிவில் தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது என்று அறிந்து கொள்வோம் வாங்க.

தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது.?

இந்தியாவின் தேசிய விலங்கு எதுவென்று கேட்டால் உடனே புலி என்று கூறிவிடுவோம். அதுவே தமிழ்நாட்டின் மாநில விலங்கு என்றால் வரையாடு. இதனை பற்றிய தகவலை அறிந்து கொள்வோம்.

வரையாடு பற்றிய தகவல்:

தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது

  • இதில் வரை என்ற சொல்லுக்கு மலை என்று பொருள். மலைகளில் மட்டுமே தென்படுவதால் இதற்கு வரையாடு என்று பெயரிடப்பட்டது.
  • தற்போது மேற்குத் தொடர்ச்சி மலை & கேரளாவையும் தமிழகத்தையும் ஒட்டிய மலைப்பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன.

இந்திய மாநில விலங்குகளின் பட்டியல்

  • இது 5–6 ஆண்டுகள் மட்டும் உயிர் வாழும்.
  • இந்த வரையாடு பயந்த குணம் உடையது. அதனால் மனிதர்கள் மற்றும் விலங்குகள் இல்லாத பகுதிகளில் வாழ்கிறது.
  • காலை மற்றும் மற்றும் மாலை நேரத்தில் தனக்கான உணவை தேடி கொள்கிறது. இதற்கு இரவு ஆனால் கண் தெரியாது.
  • இந்த அடுக்கு சிறப்பு அம்சம் என்னவென்றால் விசில் அடிப்பது போல் சத்தம் கொடுக்கும்.
  • கடல் மட்டத்திலிருந்து 1200 முதல் 2600 மீட்டர் உயரம் மலையில் வசிக்க கூடியது. பாறைகளில் உள்ள புற்களையும், தாவர இலைகளையும் உணவாக உன்ன கூடியது.
  • வயது உள்ள வரையடானது 100 கிளி எடையும், 11 சென்டி மீட்டர் உயரமும் உடையதாக இருக்கும்.
  • பெண் வரையாடு 50 கிலோ எடையும், 80 சென்டி மீட்டர் உயரமும் உடையதாக இருக்கும்.
  • ஆண் வரையாடு ஆனது அடர் பழுப்பும், மெல்லிய கருப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். பெண் வரையாடு சாம்பல் நிறத்தில் காணப்படும்.
  • இந்த ஆடுகளானது ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இனபெருக்கம் செய்யும் மாதங்களாக இருக்கிறது.
  • இவை குட்டியை 6 மாதம் சுமக்க கூடியது. இவற்றின் ஆயுட்காலம் 5 வருடம் முதல் 6 வருடமாக இருக்கிறது.

இந்தியாவில் உள்ள தேசிய பூங்காக்களின் பட்டியல்..!

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement