பணத்தில் பிள்ளையார் ஃபோட்டோ வைத்திருக்கும் நாடு எது தெரியுமா.? இந்தியா இல்லை..!

Advertisement

Which Country has Printed Lord Ganesha Image on Its Currency Note

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள தகவலை அறிந்து வருகிறோம். எனவே, அந்த வகையில் இன்றைய GK  பகுதியில் அருமையான ஒரு தகவலை தெரிந்துகொள்ளலாம்.  அதாவது, ஒரு நாட்டில் இந்து கடவுள்களில் ஒருவரான விநாயக பெருமான் உருவப்படத்தை அச்சித்தப்பட்டுள்ளது. அது எந்த நாடு என்பதை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

நம்ம நாட்டு ரூபாய் நோட்டில் காந்தி தாத்தா இருப்பது போல, இந்த ஒரு நாட்டில், விநாயக பெருமான் ரூபாய் நோட்டில் இருக்கிறார். அது எந்த  நாடு என்று உங்களுக்கு தெரியுமா.? அப்படி தெரியவில்லை என்றால் வாருங்கள் அதனை தெரிந்துகொள்ளலாம்.

விநாயகர் முன் தோப்புக்கரணம் போடுவது ஏன்.?

கரன்சி நோட்டில் விநாயகர்  படத்தை பதித்துள்ள நாடு:

கரன்சி நோட்டில் விநாயகர்  படத்தை பதித்துள்ள நாடு இந்தோனேசியா (Indonesia) ஆகும்.

ndonesian

இந்தோனேசியாவின் 20,000 ரூபாய் நோட்டில் விநாயகப் பெருமானின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்கள் அதிகம் வாழும் இந்தோனேசியா நாட்டில் தான் கரன்சி நோட்டில் விநாயகப் பெருமானை பதித்துள்ளனர்.

கரன்சி நோட்டில் விநாயகர்  படத்தை பதித்துள்ள நாடு

உலகிலேயே கரன்சி நோட்டில் விநாயகர் உருவம் வைத்திருக்கும் ஒரே நாடு இந்தியா அல்ல இந்தோனேசியா என்பதை அனைவரும் அறிய வேண்டும்.

விநாயகப் பெருமானின் உருவத்தைக் கொண்ட 20,000 ரூபாய் மதிப்புள்ள இந்தோனேசிய நாணயத் தாள் (IDR) 1998 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல், அந்த நோட்டில் சுதந்திரப் போராட்ட வீரரும் கல்வி வழக்கறிஞருமான கி ஹஜர் தேவந்தராவும் இடம்பெற்றுள்ளார். இந்தோனேசியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள கரன்சி நோட்டுகளில் விநாயகர் உருவம் இல்லை.

ஏன் இந்தோனேசியாவின் கரன்சி நோட்டில் விநாயகர் உருவம் உள்ளது.?

இந்தோனேசிய அரசாங்கம் இஸ்லாம், புராட்டஸ்டன்டிசம், ரோமன் கத்தோலிக்கம், இந்து மதம், பௌத்தம் மற்றும் கன்பூசியனிசம் ஆகிய ஆறு மதங்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

தியேட்டர் இல்லாத நாடு எது தெரியுமா.?

இந்தோனோஷியா மக்கள்தொகையில் 87 சதவீதத்திற்கும் அதிகமானோர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இது அதிக மக்கள்தொகை கொண்ட முஸ்லீம் நாடாக மாறியது.  மக்கள் தொகையில் 1.7 சதவீதம் பேர் மட்டுமே இந்துக்கள். இருந்தாலும் கூட இந்நாடு இந்து மதத்துடன் ஒரு அழகான வரலாற்றைப் பகிர்ந்து கொள்கிறது என்பதை உறுதிப்படுத்த அவர்கள் இந்து கடவுளான விநாயக பெருமானை அந்நாட்டின் கரன்சி நோட்டில் அச்சிட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்தோனேசியாவின் சில பகுதிகள் ஒரு காலத்தில் சோழ வம்சத்தின் ஆட்சியின் கீழ் இருந்தபோது அங்கு பல கோயில்கள் கட்டப்பட்டன. ஞானம், கலை மற்றும் அறிவியலின் கடவுளாக விநாயகப் பெருமான்  அந்நாட்டின் கரன்சி நோட்டில் இடம்பெற்றதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

கொடி இல்லாத நாடு எது தெரியுமா ?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement