விநாயகர் முன் தோப்புக்கரணம் போடுவது ஏன்.?

Advertisement

Why Doing Thoppukaranam for Vinayagar in Tamil

ஒவ்வொரு கடவுளையும் வணங்குவதற்கு ஒரு முறை இருக்கிறது. அதன் படியே அனைவரும் வணங்கி வருகின்றோம். அதேபோல், விநாயகரை வணங்கும்போது நாம் அனைவருமே தலையில் கொட்டி தோப்புக்கரணம் போட்டு வணங்குவோம். இவ்வாறு ஏன் வணங்குகிறோம் என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா.? அப்படி யோசித்து இருந்தீர்கள் என்றால் இப்பதிவு உங்களுக்கு அதற்கான பதிலை அளிக்கும்.

முழுமுதற்கடவுளாக விநாயகரை தோப்புக்கரணம் போட்டு வணங்க வேண்டும் என்று அனைவர்க்கும் தெரியும். அதாவது, விநாயகரை வணங்கும் போது வலதுகையால் இடதுபக்க நெற்றிப் பொட்டிலும், இடது கையால் வலதுபக்க நெற்றிப் பொட்டிலும் 3 முறை குட்டிக் கொண்டு வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்து உட்கார்ந்து எழுந்து தோப்புக் கரணம் போட்டு வணங்குவோம். அவ்வாறு வணங்குதற்கு முன் புராண கதை ஒன்று உள்ளது. அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

டாக்டரிடம் சென்றதும் ஏன் முதலில் நாக்கை நீட்ட சொல்கிறார் தெரியுமா.?

விநாயகர் முன் தலையில் கொட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்.?

விநாயகர் முன் தோப்புக்கரணம் போடுவது ஏன்

அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை காகம் வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார். அதன் பிறகு, அகத்தியர் முன்பு அந்தணச் சிறுவன் வடிவில் வந்து நின்றார் பிள்ளையார். இதனால் கோபம் அடைந்த அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலகத்தின் நன்மைக்காக தான் அப்படி செய்தேன் என்று கூறினார். அதாவது, உலகத்தில் காவிரியை உருவாக்க தான் அப்படி செய்தேன் என்று கூறினார். விநாயகர் கூறியதை கேட்ட அகத்தியர், தன் தவறை உணர்ந்து அவரது தலையிலே கொட்டி கொண்டார். இதன் காரணமாகத்தான் அன்று முதல் இன்று விநாயகரை தலையில் கொட்டி வணங்கும் வழக்கம் வந்தது.

கஜமுகாசுரன் என்ற அசுரன், மாதங்கபுரத்தை ஆட்சி புரிந்து வந்தான். இவன் சிவபிரானை நோக்கிப் பெருந்தவம் புரிந்து எந்த ஒரு ஆயுதத்தினாலும் அவனை அழிக்கமுடியாத அழியாவரமும் பெற்றான். அதன் பிறகு, அவன் பெற்ற வரத்தினால் இந்திரனாதி தேவர்களைத் துன்புறுத்தினான். இதனால் இந்திரனாதி தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.

சிவபெருமான், விநாயகரை கஜமுகாசுரனுடன் போர் புரியுமாறு ஆணையிட்டார். சிவபிரான் ஆணைப்படி விநாயகப்பெருமான் கஜமுகனுடன் பெரும் போர் புரிந்து வெற்றி பெற்றார். அப்போது, இந்திரனாதி தேவர்கள், இத்தனை காலம் கஜமுகாசுரனுக்கு மூன்று வேலையும் ஆயிரத்தெட்டு தோப்புக்கரணம் போட்டோம். இனி தங்கள் முன் அதனைச் செய்ய அருள் புரிக என்று கேட்டார்கள். அதனால், பிள்ளையார் சிரித்துக்கொண்டே மூன்று முறை தோப்புக்கரணம் போட்டால் போதும் என்று கூறினார். அன்று முதல் இன்று முறை அனைவரும் விநாயகரை தோப்புக்கரணம் போட்டு வணங்கும் வழக்கம் இருக்கிறது.

சாப்பிடும் போது கையை தரையில் வைத்து சாப்பிட கூடாது ஏன் தெரியுமா..?

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement