Why Do Doctors Ask You to Stick Out Your Tongue
நாம் அனைவருமே ஏதேனும் உடல்நிலை சரியில்லை என்றால் முதல் மருத்துவமனைக்கு செல்வோம். அங்கு மருத்துவரை பார்த்ததும் அவர் முதலில் நாக்கை தான் நீட்ட சொல்வார். நாக்கை நீட்ட சொல்லி டார்ச் அடித்து பார்ப்பார்கள். ஏன் முதலில் நாக்கை நீட்ட சொல்கிறார்கள் என்று என்றாவது யோசித்தது உண்டா.? அப்படி யோசித்து இருந்தீர்கள் என்றால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நாக்கு என்பது நம் உடலில் ஒரு முக்கியமாக உறுப்பு என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், நாக்கை பற்றிய பல விஷயங்கள் நமக்கு தெரியாது. அதாவது நாக்கின் தன்மையை வைத்தே நம் உடலில் என்ன பிரச்சனை என்பதை கண்டுபிடித்து விடலாம். அதனால் தான் மருத்துவர்கள் நாக்கை நீட்ட சொல்கிறார்கள். அதனை பற்றி விரிவாக பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
டாக்டர் நாக்கை நீட்ட சொல்வதற்கான காரணம்:
நாக்கு என்பது நம் உடலில் சகல உறுப்புகளுடன் தொடர்புடையது. நம் உடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதற்காக விளைவுகள் நாக்கில் தோன்றும். அதனை வைத்தே நம் உடலில் இந்த பிரச்சனை தான் இருக்கிறது என்பதை கணித்து விடலாம். அதாவது நம் உடலில் வைட்டமின் பாதிப்புகள், தொற்றுப் பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு, நரம்பு மண்டலப் பாதிப்பு போன்றவை இருந்தால் நாக்கை வைத்து அறிந்து கொள்ளலாம். அதற்காக தான் மருத்துவர்கள் நாக்கை நீட்ட சொல்வார்கள். நாக்கின் தன்மையை வைத்து எப்படி நோயினை தெரிந்து கொள்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
மார்கழி மாதத்தில் மட்டும் வாசலில் ஏன் பூசணி பூ வைக்கிறார்கள் தெரியுமா
நீல நிற நாக்கு:
நாக்கு நீல நிறத்தில் இருந்தால் சிறுநீரகத்தில் பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம். அதாவது, சிறுநீரக சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
வெளிர் வெள்ளை நிற நாக்கு:
நாக்கு வெள்ளை நிறத்தில் இருந்தால், உடலில் உடல் நேர் வற்றி இருக்கிறது என்றும் நுண்ணிய கிருமிகளால் தொற்று காய்ச்சல் ஏற்படுகிறது என்பதையும் உணர்த்துகிறது.
மஞ்சள் நிற நாக்கு:
நாக்கு மஞ்சள் நிறத்தில் இருந்தால், உடலில் வயிறு அல்லது கல்லீரல் சம்மந்தமான நோய் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
சிகப்பு நிற நாக்கு:
நாக்கு அதிக சிகப்பு நிறத்தில் இருந்தால், உடலில் தொற்று நோய் இருக்கிறது என்பதையும் அலர்ஜி இருக்கிறது என்பதையும் உணர்த்துகிறது.
சிமெண்ட் நிற நாக்கு:
நாக்கு சிமெண்ட் நிறத்தில் இருந்தால், உடலில் செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருக்கிறது என்பதையும் மூல நோய் உள்ளதையும் உணர்த்துகிறது.
இளஞ்சிவப்பு நிற நாக்கு:
நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால் இதய சம்மந்தப்பட்ட பிரச்சனை அல்லது இரத்தம் சம்மந்தப்பட்ட நோய் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
பாக்கு சாப்பிடும் போது தொண்டை அடைக்க காரணம் என்ன தெரியுமா
காபி நிற நாக்கு:
நாக்கு காபி நிறத்தில் இருந்தால், உடலில் நுரையீரல் பிரச்சனை இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
பிங்க் நிற நாக்கு:
நாக்கு பிங்க் நிறத்தில் இருந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். ஆகையால், நாக்கு பிங்க் நிறத்தில் இருப்பது தான் நல்லது.
நாக்கு வீங்கி இருப்பது:
நாக்கு வீங்கி இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது என்றும், நாக்கில் வலி இருந்தால் சர்க்கரை நோய் இருக்கிறது என்றும் நாக்கின் மேற்பரப்பு வறண்டு இருந்தால் ரத்தச்சோகை இருக்கிறது என்றும் நாக்கின் நுணி மட்டும் சிவந்திருந்தால் மனஅழுத்தம் இருக்கிறது என்பதும் அர்த்தம் ஆகும்.
👉எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |