பாக்கு சாப்பிடும் போது தொண்டை அடைக்க காரணம் என்ன தெரியுமா..?

Advertisement

Why Does The Throat Get Blocked While Eating Betel Nut in Tamil

வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் என்ன தகவலை பற்றி தெரிந்துகொள்ள போகின்றோம் என்று மேல் இருக்கும் ஹெட்டிங்கை படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். பொதுவாக நாம் அனைவருமே பாக்கு கண்டிப்பாக சாப்பிட்டிருப்போம். சிறு வயதில் ஏதாவது விசேஷத்திற்கு சென்றால் அங்கு அதிகமாக திருடி சாப்பிட்ட பொருள் என்றால் அது பாக்கு தான். இப்படி பாக்கு திருடி சாப்பிட்ட அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா..?

அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை மாறாமல் நம் தமிழர்கள் கடைப்பிடித்து வரும் பழக்கங்களில் இதுவும் ஓன்று. அதாவது, விசேஷங்களில் விருந்து சாப்பிட்டுவிட்டு இந்த பாக்கு போடுவது வழக்கம். இது இன்றும் பல இடங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சரி பொதுவாக நாம் பாக்கு சாப்பிடும் போது தொண்டை அடைக்கும்..? ஏன் அப்படி அடைக்கிறது என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.

ஆள்காட்டி விரலை நீட்டி சாப்பிட கூடாது என்று ஏன் சொல்கிறார்கள்

பாக்கு சாப்பிடும் போது தொண்டை அடைக்க காரணம் என்ன..? 

பாக்கு சாப்பிடும் போது தொண்டை அடைக்க காரணம் என்ன

பாக்கு பற்றி நம் அனைவருக்குமே தெரியும். பாக்கு என்பது பாக்கு மரத்திலிருந்து பெறப்படும் விதையாகும். இது ஆசிய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் காணப்படுகிறது.

இந்த பாக்கானது தமிழர்களின் சடங்குகளிலும் விழாக்களிலும் அதிகமாக வெற்றிலையுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வெற்றிலை, பாக்கு போடும்போது முதலில் பாக்கை மட்டும் போடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

என்னது மனுஷனோட DNA -வும் இந்த பழத்தோட DNA -வும் ஒரே மாதிரி இருக்கா.. அது என்ன பழம் தெரியுமா

அதேபோல, பலரும் வெற்றிலை போட்டு சாப்பிட்ட பிறகு பாக்கு போட்டு மெல்லுவார்கள். அதையும் நாம் பார்த்திருப்போம்.

அதற்கு காரணம் என்னவென்றால், பாக்கை மட்டும் வாயில் போட்டு சாப்பிடுவதால், அதில் இருந்து வரும் உமிழ்நீரை நாம் விழுங்கும் போது இதன் துவர்ப்பினால் கழுத்துக் குழல் சுருங்குகிறது. இதனால் நெஞ்சு அடைப்பு, மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. 

எனவே இனி வெறும் பாக்கை சாப்பிடாமல் இருப்பது நல்லது. அதுமட்டுமில்லாமல், பாக்கு  அதிகமாக சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement