மார்கழி மாதத்தில் மட்டும் வாசலில் ஏன் பூசணி பூ வைக்கிறார்கள் தெரியுமா.?

Advertisement

Why Pumpkin Flowers are Placed at the Threshold only in Margazhi

மாதங்களில் மற்ற மாதங்களை விட மார்கழி மாதம் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. மார்கழி மாதம் என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது பனியும், கோலமும் தான். பெண்கள் அனைவரும் மற்ற மாதங்களில் லேட்டாக எழுந்து வாசலில் சிறிய கோலம் இட்டுவிட்டு அதன் பிறகு மற்ற வேலையை செய்ய போய்விடுவார்கள். ஆனால், மார்கழி மாதத்தில் மட்டும் அதிகாலையில் 4 மணி அல்லது 5 மணிக்குள் எழுந்து வீட்டில் பெரிய கோலமாக போடுவார்கள். அதுமட்டுமில்லாமல், அந்த கோலத்திற்கு மேலும், அழகு சேர்க்க வண்ண நிற கோலமாவிலும் வண்ணம் தீட்டுவார்கள்.

மேலும், பக்கத்துக்கு வீட்டு கோலத்தை விட நம் வீட்டில் போடும் கோலம் அழகாவும் பெரியதாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதனால், முதல் நாள் இரவே பெரிய கோலாக பார்த்து எடுத்து வைத்து விடுவார்கள். வாசலில் கோலம் போட்ட பிறகு, அதன் நடுவில் சனம் சாணத்தால் பிள்ளையார் பிடித்து அதன் மேலே, பூசணி பூ வைப்பார்கள்..  மார்கழி மாதத்தில் மட்டும் இந்த பூசணி பூவை ஏன் கோலத்தில் வைக்கிறார்கள்.? என்று நீங்கள் என்றாவது யோசித்து இருக்கிறீர்களா..? அப்படி யோசித்து இருப்பவர்களுக்கு இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நாய்கள் இரவு நேரங்களில் அழுவதற்கு என்ன காரணம் தெரியுமா.

மார்கழி மாதத்தில் வாசலில் பூசணி பூ வைப்பதற்கான காரணம்:

மார்கழி மாதத்தில் வாசலில் பூசணி பூ வைப்பதற்கான காரணம்

 

இறைவழிபாட்டிற்குரிய புனிதமான இந்த மார்கழி மாதத்தில் வாசலில் அதிகாலையிலே பெரிய கோலாக இட்டு அதன் நடுவே பசுஞ்சாண உருண்டைகளில் பூசணிப்பூக்களைப் பொதிந்து வைத்து வருவது வழக்கம். இது வழக்கமாக இருந்தாலும் இதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

இந்து மத கடவுளான இந்திரனுக்கு உகந்த பூ பூசணி என்று சொல்லப்படுகிறது. அதாவது பூசணி , மருதநில தெய்வமாகிய இந்திரனுக்கு உகந்தவையாகச் சொல்லப் பெற்றிருக்கின்றன. ஆகையால், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமான மார்கழி மாதத்தில் வாசலில் கோலமிட்டு தங்கநிறப் பூக்களான பூசணிப் பூக்களை வைத்து அலங்கரிப்பதன் மூலம் இந்திரன் மகிழ்ச்சியடைந்து, அவரருளால் வீட்டில் செல்வம் தழைத்திடும் என்பது ஐதீகம். அதுமட்டுமில்லாமல், இந்திரனின் முக்கிய ஆயுதமாக விளங்கும் இடியே பூமியில் பூசணிப்பூக்களாக மலர்ந்தன என்றும், இந்திரனின் ஐராவத யானையே வெண்பூசணியாக பூமியில் காய்க்கிறது என்றும் கூறப்படுகிறது.

மறுபுறம், பூசணி பூவை வாசலில் வைப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. அதாவது, மார்கழி மாதம் பனிக்காலம் என்பதால், அக்காலத்தில் நோய்த்தொற்றுகள் அதிகம் ஏற்படும் என்பதால், நோய்த்தொற்றுக்களை தடுக்கும் தன்மை கொண்ட பூசணிப்பூ மற்றும் சாணத்தை வாசலில் கோலத்தின் நடுவே வைக்கப்படுகிறது என்று முன்னோர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமில்லாமல், மார்கழி மாதத்தில், வாசலில் கோலம் இட்டு பூசணி பூ வைத்து சென்றால், அதன் வழியே வரும் பெரியவர்கள், இந்த வீட்டில் கல்யாண வயதில் பெண் அல்லது ஆண் இருக்கிறார்கள் என்று நினைத்து மார்கழிக்கு அடுத்து வரும் தை மாதத்தில் வரன் பேசி கல்யாணம் செய்து வைப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும்.!

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement