Who Invented The Clock?
ஹலோ வீவர்ஸ்.. வணக்கம் இன்றைய சூழ்நிலையில் டைம் என்பது எவ்வளவு முக்கியம் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஏன் என்றால் நேரத்தை சரியாக பயன்படுத்தியவர்கள் தான் இன்றைக்கு வெற்றியாளராகவும், பணக்காரர்ககவும் இருக்கின்றன டைம் என்ற சொல்லுக்கு காலம், நேரம், சமயம், பொழுது, காலமானி என்று சில வேறு பெயர்களும் உண்டு. நாம் நேரத்தை பார்ப்பதற்கு பயன்படுத்தும் கடிகாரத்தை யார் முதல் முதலில் கண்டுபிடித்தது என்று உங்களுக்கு தெரியுமா?
ஒரு வேளை உங்களுக்கு தெரியாது என்றால் இந்த பதிவு உங்களுக்குகானது தான். ஆம் நண்பர்களே இன்று நாம் பொது அறிவு வினா விடையில் கடிகாரத்தை முதல்முதலில் கண்டுபிடித்தவர் யார் என்று தான் தெரிந்துகொள்ள போகிறோம். ஆக பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
கடிகாரத்தை கண்டுபிடித்தவர்கள் யார்?
sun dial:
முதன் முதலில் எகிப்தில் தான் சூரியனை வைத்து நேரத்தை கணக்கிட்டு உள்ளனர். அதற்கு அவர்கள் பயன்படுத்திய கருவியின் பெயர் sun dial ஆகும். sun dial கருவி மேல் படத்தில் கட்டியுள்ள போல் தான் இருக்கும். இந்த கருவியை அந்த காலத்தில் கல் மற்றும் மரம் இரண்டு வகையிலும் தயாரித்துள்ளார்.
இது பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது என்றால் ஒரு தட்டுக்கு நடுவில் ஒரு பில்லரை நட்டு வைத்துபிறது போல் இருக்கும். இந்த sun dial கருவியை எப்படி பயன்படுத்தியுள்ளனர் என்றால் சூரியன் வரும் போது அந்த sun dial கருவியை வைப்பார்கள்.
அதனுடைய நிழல் அந்த தட்டின் மீது விழும், அந்த தட்டில் ஏற்கனவே நண்பர்கள் எழுதி வைத்திருப்பார்கள் ஆக அந்த எண் மற்றும் அந்த நிலையை ஒப்பிட்டு பார்த்து நேரத்தை கணித்துள்ளனர்.
இது தான் நேரத்தை காண்பதற்காக கண்டுபிடித்த முதல் கருவி ஆகும். இருப்பினும் இதனை நீங்கள் வீட்டில் வைத்து பயன்படுத்த முடியாது. அதேபோல் மழை காலங்களில் இந்த கருவியை வைத்து நேரம் பார்க்க முடியாது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சந்திரயான் 3 லேண்டர் பெயர் என்ன?
Hourglass:
ஆக sun dial கருவிக்கு பதிலாக வேறு ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அதன் பிறகு கண்டு பிடித்த கருவி தான் இந்த மணல் கடிகாரம் என்று சொல்லப்படும் stand clock ஆகும்.
இருப்பினும் இவற்றில் நாம் ஒரு மணி நேரம் வரை மட்டுமே நேரத்தை கணக்கிட முடியும். ஏன் என்றால் அதற்கு மேல் அவற்றில் மணல் வைக்க கூடியது. மீறி வைக்க வேண்டும் என்றால் அதனுடைய அளவை பெரிதாக்க வேண்டும். இதன் காரணமாகவே இந்த மண் கடிகாரத்திற்கு.
Water clock:
இதனை பார்த்த கிரேக்க ரோமானியர்கள் மணலுக்கு பதிலாக தண்ணிரை பயன்படுத்தினார்கள். இதனுடைய தோற்றம் பார்ப்பதற்கு மணல் கடிகாரம் போல் தான் இருக்கும் ஆனால் அவற்றில் மணலுக்கு பதிலாக தண்ணீரை பயன்படுத்தினார்கள்.
இந்த தண்ணீர் கடிகாரத்தின் மற்றொரு பெயர் Clepsydra ஆகும். இந்த தண்ணீர் கடிகாரம் மணல் கடிகாரத்தை விட சரியான நேரத்தை காட்டியதால் அனைத்து நாட்டினரும் இந்த clepsydra clock-ஐ பயன்படுத்த ஆரம்பித்தனர்.
அதன் பிறகு சீனாவை சேர்ந்த சு சுங் (Su Sung) என்பவர் இந்த நீர் கடிகாரத்தில் Mechanism-ஐ பயன்படுத்தியுள்ளார். அது என்னமாதிரியான Mechanism என்றால் மேல் இருக்கும் பவுலில் தண்ணீர் தீர தீர மீண்டும் அவற்றில் தண்ணீர் நிரம்பிக்கொண்டு இருக்கும். ஆக இது தொடர்ச்சியாக நேரத்தை காட்டிக்கொண்டே இருக்கும். 15 நூற்றுவரை இந்த மாதிரியான தண்ணீர் கடிகாரத்தை தான் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உலகிலேயே சிறந்த மருத்துவத்துறையை கொண்டுள்ள நாடு எது தெரியுமா..?
Pomander watch:
அதன் பிறகு ஜெர்மன் நாட்டை சேர்ந்த பீட்டர் ஹென்லீன் என்பவர் ஒரு கடிகாரத்தை கண்டுபிடித்துள்ளார். அது தான் நாம் இப்பொழுது பயன்படும் கடிகாரத்திற்கெல்லாம் அடிப்படை மாடலாக இருக்கிறது. father of the modern clock என்று பீட்டர் ஹென்லீன் தான் அழைக்கப்படுகிறார்.
இவரை பற்றி சொல்ல வேண்டும் என்றால், இவர் ஜெர்மன் நாட்டைச் சார்ந்த பூட்டு செய்யும் தொழிலாளி ஆவர். இவர் கண்டுபிடித்த கடிகாரத்தில் பல Mechanism பயன்படுத்தி இருந்தாலும். ஆனாலும் அவற்றில் இருந்த இரண்டு ஸ்ப்ரிங் தான் முக்கியமான ஒன்றாக இருந்தது. அந்த ஸ்ப்ரிங் மூலமாக தான் ஒவ்வொரு நிமிடத்தையும் அந்த கடிகாரம் கணக்கிட்டு வேலை செய்தது.
அதன் பிறகு 1637-ஆம் ஆண்டு கலீலியோ கலிலி மற்றும் கிரிஸ்டியன் ஹய்ஜின்ஸ் (Chrishtiaan Huygens) என்னும் அறிவியல் அறிஞர்கள் இருவரும் சேர்ந்து pendulum clock என்னும் கடிகாரத்தை கண்டுபிடித்தனர்.
இவற்றில் கலீலியோ கலிலி one oscillation is equal to one second என்ற ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கிறார். oscillation அப்படின்னா ஒரு குச்சியில் ஒரு நூல் கட்டி அந்த நூலில் ஒரு பாலினை கட்டி அந்த பாலினை தள்ளிவிட்டால் மறுபடியும் அதே இடத்தில் வந்து நிற்பதற்கு அது ஒரு நிமிடம் டயம் எடுத்து கொள்ளும். இதை தான் கலீலியோ கலிலி கண்டுபிடித்தார். இப்படி தான் pendulum clock-யில் ஒவ்வொரு நிமிடத்தையும் கணக்கிட்டு அந்த கடிகாரம் வேலை செய்கிறது.
அதன் பிறகு இந்த pendulum clock-ஐ அடிப்படியாக கொண்டு நிறைய கடிகாரம் வந்துகொண்டிருந்தது. 19 ஆம் நூற்றாண்டு வரை இந்த pendulum clock-ஐ தான் மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அதன் பிறகு இதே pendulum clock-யில் பேட்டரி செட் செய்து எலக்ட்ரிக் எனர்ஜியில் வேலை செய்யும்படி உருவாக்கினார்கள். இதன் மூலமாக அந்த கடிகாரத்தின் அளவு மற்றும் எடை குறைந்தது.
அதே நேரத்தில் ஆபிரகாம் லூயிஸ் என்பவர் முதன் முதலில் Bristol Watch என்னும் கடிகாரத்தை கண்டுபிடிக்கிறார். Bristol Watch என்பது வேறு ஒன்றும் இல்லை கைக்கடிகாரம் தான். இந்த Bristol Watch-யிலும் pendulum clock-யின் மெக்கானிஸத்தை பயன்படுத்தி இருந்தனர்.
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மாற்றத்தை கண்ட கடிகாரம் இப்பொழுது நமது வீடு மற்றும் கைகளில் ஸ்மார்ட் கடிகாரமாக வளம் வருகிறது. மொத்தமாக இதனை வகையான கடிகாரம் தான் கண்டுபிடிச்சாங்களானு கேட்டிங்கன்னா கண்டிப்பா இல்லவே இல்லை.
இன்னும் நிறைய வகையான கடிகாரணகளை கண்டுபிடித்து பயன்படுத்தியுள்ளனர். உதாரணத்திற்கு candle clock, incense clock, oil lamp clock என்று இன்னும் பலவிதமான கடிகாரங்கள் இருக்கின்றன இருப்பினும் இவை எல்லாம் ரொம்ப நாட்கள் பயன்பாட்டில் இல்லயாம். அதுமட்டும் இல்லாமல் இவை எல்லாம் இரவில் பயன்படுத்த கூடிய கடிகாரங்கள் ஆகும்.
ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு வகையான கடிகாரங்களை கண்டு பிடித்ததால் கடிகாரத்தை கண்டுபிடித்து யார் என்று சரியாக தெரியவில்லை.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |