World Smallest Monkey In Tamil
குரங்குகள் என்றாலே வேடிக்கை நிறைந்த விலங்குகளில் ஒன்றாகும். மரத்திற்கும் மரம் தாவுவது, மொட்டை மாடியில் காய வைத்த பொருட்களை எடுத்துட்டு ஓடிடுவது என நிறைய குறும்பு தனங்களை செய்யும். சேட்டைகள் செய்தாலும் அதுவும் பார்ப்பதற்கு வேடிக்கையாகத்தான் இருக்கும். பொதுவாக விலங்குகள் வளர்ந்தவுடன் சேட்டைகள் செய்தாலும் குட்டியாக இருக்கும் விலங்குகளை நமக்கு மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட குறும்பு நிறைந்த குரங்குகள் வெறும் உள்ளங்கை அளவு இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். அப்படிப்பட்ட குரங்கு இனத்தை தான் பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம்.
உலகிலேயே மிக சிறிய குரங்கு வகை
- பிக்மி மார்மோசெட் இந்த குரங்கு தான் உலகிலேயே மிக சிறிய குரங்கு. இது ஒருவரின் விரல் அளவு தான் இருக்கும். இந்த குரங்கு மேற்கு அமேசான், பிரேசில் மற்றும் கோலாம்பியா ஆகிய இடங்களில் தான் அதிகம் காணப்படுகின்றன. இந்த பிக்மி மார்மோசெட் குரங்கு பசுமையான மற்றும் தண்ணீர் நிறைந்துள்ள பகுதிகளை அதிகம் விரும்புகின்றன. இந்த குரங்கின் உடல் நீளம் 11 செ.மீ அல்லது 16 செ. மீ வரை இருக்கும். ஆனால் அதன் வாலின் நீளம் 17 செ.மீ இருந்து 20 செ. மீ வரை இருக்குமாம். அதன் உடல் நீளத்தைவிட வாலின் நீளம் பெரிதாக இருக்குமாம். இதோட எடை வெறும் 100 கிராம் அளவிற்குத்தான் இருக்கும்.
- இந்த குரங்கு தன்னுடைய தலையை 120 டிகிரி வரை திருப்புமாம். இதைவைத்து தான் காட்டில் வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தன்னை பாதுகாத்து கொள்ளுமாம்.
- மார்மோசெட் குரங்கு 11 ஆண்டிலிருந்து 12 ஆண்டுகள் வரை தான் உயிர் வாழுமாம். ஆனால் மிருக காட்சி சாலைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழுவதாக கூறுகின்றனர். ஏனென்றால் காட்டில் இருக்கும் போது மரத்தில் இருந்து கீழே விழுந்து இறந்துவிடுகின்றன.
- இந்த வகை குரங்குகள் பூச்சிகள், புழுக்கள் மற்றும் பழவகைகளை தான் உட்கொள்ளுமாம். இதனை செல்லப்பிராணியாகவும் விரும்பி வளர்க்கிறன்றனர். ஆனால் இவை குழுவாகத்தான் இருக்க விருப்புகின்றன. இதனை செல்லபிராணியாக வளர்க்க மார்மோசெட் குரங்குகள் ஏற்றுமதி இறக்குமதி செய்ய அமெரிக்காவில் தடை விதித்துள்ளனர்.
கொரில்லா குரங்கு பற்றிய உங்களுக்கு தெரியுமா..?
இதுபோன்று விலங்குகள் பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 | Animals in Tamil |