கொரில்லா குரங்கு பற்றிய உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Information of Gorilla in Tamil

பொதுவாக மனிதர்களை குரங்கில் இருந்து தான் தோன்றினார்கள் என்று கூறுவோம். ஆனால் அது சாத்தியமான ஒரு உண்மையும் கூட. என்ன தான் நாம் குரங்கில் இருந்து தோன்றினாலும் கூட குணங்கள் என்பது வேறுபட்டு தான் காணப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் விலங்குகள் நிறையவே உள்ளது. அதிலும் குறிப்பாக வெவ்வேறு வகைகளும் அதில் காணப்படுகிறது. மேலும் விலங்குகளின் குணங்களும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு போவது இல்லை. அதனால் இன்று விலங்குகளில் ஒன்றான கொரில்லா குரங்கு பற்றிய தகவலை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

நீர்யானை பற்றிய 10 சுவாரசியமான தகவல்கள்.. 

கொரில்லா குரங்கு பற்றிய தகவல்:

விலங்குகளில் ஒன்றாக வாழக்கூடியது தான் கொரில்லா குரங்கு. இந்த கொரில்லா குரங்கு ஆனது பெரும்பாலும் ஆப்பிரிக்கா பகுதிகளில் தான் அதிகமாக வாழக்கூடியதாக உள்ளது.

இத்தகைய குரங்கு ஆனது மனித இனத்துடன் ஒப்பிட்டு போகக்கூடிய ஒரு குரங்காக உள்ளது. மேலும் கொரில்லாவின் DNA-வும், மனிதர்களின் DNA-வும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருப்பதால் ஒரே மாதிரியாக இருப்பதனால் இது மனிதக் குரங்கு என்ற மற்றொரு பெயரும் உள்ளது.

  • வகுப்பு: பாலூட்டிகள்
  • குடும்பம்: ஹோமினிடே
  • தொகுதி: முதுகுநாணிகள்
  • திணை: விலங்குகள்
  • ஆயுட்காலம்: 53 முதல் 56 வருடம்
  • இனம்: ஆப்பிரிக்க கொரில்லா
  • ஆங்கில பெயர்: Gorilla

கொரில்லாவின் உடல் அமைப்பு:

மனித குரங்கு

கொரில்லாவின் எடை மட்டும் சுமார் 100 முதல் 270 கிலோ வரை உள்ளது. மேலும் இதனுடைய உடல் ஆனது 1.25 முதல் 1.8 மீட்டர் உயரமாகவும், 15 முதல் 20 சதவீதம் வரை நீளமாகவும் காணப்படுகிறது. இது பெரும்பாலும் காடுகளில் தான் வாழ்கிறது.

அதேபோல் பெண் கொரில்லாக்கள் ஆண் கொரில்லாக்கின் எடையில் பாதியளவு மட்டுமே காணப்படுகிறது. கொரில்லாக்கள் கருப்பு நிறத்தில் மட்டும் தான் உள்ளது.

கொரில்லாக்கள் தடித்த மற்றும் வலுவான மார்பு, நீண்டுகொண்டிருக்கும் வயிற்றினையும் கொண்டுள்ளது. இதனுடைய உடலில் வெள்ளை நிறத்தில் சிறு சிறு முடிகளும் உள்ளது. இதனுடைய பற்கள் ஆனது மிகவும் கூர்மையாகவும், பெரிதாகவும் உள்ளது.

இனப்பெருக்கம்:

பெண் கொரில்லாக்கள் 3 முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் கருவுருகின்றன. அதேபோல் இந்த மனித குரங்கின் கர்ப்பகாலம் என்பது 8 1/2 மாதங்கள் வரை மட்டும் ஆகும்.

கொரில்லாவின் வகைகள்:

கொரில்லாக்களில் 2 வகைகள் உள்ளது. அத்தகைய இரண்டு வகைகளும் தனித்தனியாக 2 கிளையினங்களும் உள்ளது.

இதில் மேற்கு கொரில்லா மற்றும் கிழக்கு கொரில்லா என இரண்டு வகைகள் உள்ளது.

உணவு:

கொரில்லாக்கள் உணவாக இலைகள், பழங்கள், கிழங்குகள் மற்றும் உண்ணிகள் என இவற்றை தான் உணவாக எடுத்துக்கொள்கிறது.

மேலும் இதற்கு மனித குரங்கு என்ற மற்றொரு பெயரும் உள்ளது.

கழுதை பற்றிய தகவல்கள்

இதுபோன்று விலங்குகள் பற்றிய  தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Animals in Tamil
Advertisement