கழுதை பற்றிய தகவல்கள்..! | Donkey Information in Tamil

Advertisement

Donkey Information 

பொதுவாக மனிதர்களை திட்டுவதற்கு என்று பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் முதல் வார்த்தை கழுதை தான். அதிலும் சிலர் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியினை சொல்லியும் திட்டுவார்கள். அந்த வகையில் கழுதையை வைத்து நாம் நிறைய பேச்சு வார்த்தையில் பேசுகிறோமே தவிர அதில் நமக்கு தெரியாத நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதனால் இன்று ஆங்கிலத்தில் Donkey என்று அழைக்கப்படும் கழுதை பற்றிய தகவல்களை இன்றைய Animals பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

நீர்யானை பற்றிய 10 சுவாரசியமான தகவல்கள்.. 

கழுதை பற்றிய தகவல்கள்:

கழுதை பற்றிய தகவல்கள்

கழுதை ஆனது வௌவால் போன்ற ஒரு பாலூட்டி இனத்தினை சேர்ந்த விலங்கு ஆகும். இத்தகைய கழுதை ஆனது குதிரை மற்றும் வரிக்குதிரை போன்ற விலங்குகளின் வரிசையில் உள்ள மற்றொரு விலங்கு ஆகும்.

ஆனால் கழுதை குதிரையின் போன்ற அம்சத்தினை கொண்டிருந்தாலும் இந்த இரண்டிலும் காணப்படும் காது ஆனது முற்றிலும் வேறுபாட்டுடன் தான் காணப்படுகிறது.

மற்ற விலங்குகளை காட்டிலும் கழுதை ஆனது அதிகப்படியான பொறுமையினையும், அதன் மேலே எடையினை சுமக்கும் திறன் கொண்டது. ஆதலால் கழுதை ஆனது பொறுமைக்கு மிகவும் பெயர் பெற்ற ஒன்றாகும்.

  • வகுப்பு: பாலூட்டிகள்
  • குடும்பம்: குதிரை குடும்பம் 
  • தொகுதி: முதுகுநாணிகள் 
  • திணை: விலங்கு
  • இனம்: ஆப்பிரிக்க கழுதை 
  • ஆயுட்காலம்: 27 முதல் 40 வருடம்  
  • ஆங்கில பெயர்: Donkey

உடல் அமைப்பு:

வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் கழுதை ஆனது 91 செ.மீ முதல் 142 செ.மீ உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. ஆனால் காடுகளில் வளர்ந்து வரும் கழுதை ஆனது 102 செ.மீ முதல் 142 செ.மீ வரை உயரம் வரை சிறப்பு கொண்டது.

ஆனால் கழுதை குறைவான உணவுகளை தான் சாப்பிடுகிறது. அதுபோலவே மற்ற விலங்குகளை விட அதிக சத்தத்தினை எழுப்பும் குணம் கொண்டது.

கழுதையின் தோல் 101.6 செமீ அகலத்தினையும், 250 கிலோ எடையினையும் கொண்டுள்ளது. இவை ஒவ்வோர் இனத்திற்கு ஏற்றவாறு மாறுபடுகிறது.

கருப்பு, வெள்ளை மற்றும் பழுப்பு நிறம் என மூன்று வகையான நிறத்தில் கழுதைகள் உள்ளது.

கழுதை வகைகள்:

தமிழில் கழுதை பெயர்கள்  ஆங்கிலத்தில் கழுதை பெயர்கள் 
நிலையான கழுதை Standard Donkey
புள்ளி கழுதை Spotted Donkey
போய்டு கழுதை Poitou Donkey
ஹின்னி கழுதை Hinny Donkey
மாமத் கழுதை Mammoth Donkey
அபிசீனியன் கழுதை Abyssinian Donkey
ஐரீஷ் கழுதை Irish Donkey
கிராண்ட் நோயர் டு பெர்ரி Grand Noir du Berry Donkey
பர்ரோ கழுதை Burro Donkey

 

கழுதை வேறு பெயர்கள்:

  • அத்திரி
  • வேசரி

மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு பெயர்களும் கோவேறு கழுதையினை குறிக்கும் வகையில் உள்ளது.

Donkey Eat Food in Tamil:

கழுதைகள் பெரும்பாலும் புல், வைக்கோல் மற்றும் பார்லி வைக்கோல் போன்றவற்றையினை உணவாக எடுத்துக்கொள்கிறது. ஆனால் தெரு ஓரங்களில் இருக்கும் கழுதைகள் பேப்பரையும் சாப்பிடுகிறது.

அணில் பற்றிய சுவாரசியமான 10 உண்மைகள்.. 

இதுபோன்று விலங்குகள் பற்றிய  தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Animals in Tamil
Advertisement