நம்முடைய உடல் உறுப்புகள் இதனை கண்டு பயப்படுகிறதா.!
நம்முடைய முன்னோர்கள் காளத்தில் உடலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். இதற்கு முக்கிய காரணமாக இருந்தது அவர்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொண்டார்கள். இதனால் அவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் உள்ளவர்கள் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளமால் பாஸ்ட் புட்டை எடுத்து கொள்கிறோம். சில பேர் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக உணவை தவிர்த்து விடுகிறார்கள்.
இதனால் உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும், அதுமட்டுமில்லாமல் நம்முடைய உடல் உறுப்புகள் அனைத்திற்கும் வாய் என்று ஒன்று இருந்தால் கதறும். அதற்கு பதிலாக நாம் கதறுகின்றோம். நமக்கு பிடிக்காத உணவாக இருந்தால் அந்த உணவே கிட்டயே கொண்டு வராதே என்று கூறுவோம். அது போல நம்முடைய உடல் உறுப்புகளும் சில விஷயங்களை கண்டு பயப்படுகிறது, அது என்னென்ன விஷயங்கள் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
சிறுநீரகம்:
நம்முடைய உடல் உறுப்புகளில் முக்கிய உறுப்பாக இருக்கிறது. இதன் தான் நம் உடலில் திரவ கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு சுத்தமான ரத்தம் தொடர்ந்து பரவுகிறது. மேலும், உடலில் உள்ள அதிகப்படியான நீர், சிறுநீரகம் மூலம் வடிகட்டப்பட்டு அது சிறுநீர் வாயிலாக வெளியேற்றப்படுகிறது. இந்த உறுப்பு ஆனது தூக்கமின்மை மற்றும் அதிக நேரம் நீங்கள் விழித்திருப்பதை கண்டு பயப்புடுகிறது.
பித்தப்பை:
நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்வதற்கு பித்தப்பை உதவுகிறது. இவை நாம் காலை உணவு சாப்பிடாமல் இருந்தால் பயப்பிடுகிறது. பலரும் வேலைக்கு செல்கின்ற அவசரத்தில் காலை உணவை தவிர்த்து விடுகிறார்கள். அதனால் இனிமேல் காலை உணவை ஒரு பி[போதும் சாப்பிடாமல் இருக்காதீர்கள்.
அழற்சியை ஏற்படுத்தும் உணவுகள் இவைதான்
இதயம்:
நம்முடைய உடல் உறுப்புகளில் இதயம் எவ்வளவு முக்கியம் என்று அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கிறது. இதனுடைய முக்கிய வேலை உடலில் உள்ள அனைத்து அசுத்த ரத்தத்தையும் சுத்திகரித்து மீண்டும் உடலுக்குச் செலுத்துவதே இதன் பணியாக இருக்கிறது. இவை உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது பயப்பிடுகிறது.
கண்கள்:
நம்மை சுற்றியுள்ள விஷயங்களை பார்த்து ரசிப்பதற்கு கண்கள் தான் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த கண்ணானது ஸ்மார்ட்போன்கள் அதிக நேரம் பார்ப்பது, Computer அதிக நேரம் பார்ப்பது போன்றவை கண்களை பாதிக்க செய்யும்.
நுரையீரல்:
நுரையீரல் ஆனது நாம் மூச்சை இழுத்து விடுவதற்கு உதவியாக இருக்கிறது. இந்த உறுப்பு ஆனது புகைப்பிடித்தால் அஞ்சுகிறது. இதனை நீங்கள் தொடர்ந்து செய்வதன் மூலம் நுரையீரல் ஆனது பாதிக்கும்.
வயிறு:
வயிறு செரிமானத்தை உண்டாக்குவதோடு மட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுகிறது. இந்த வயிறு ஆனது குளிர்ச்சியாக சாப்பிடும் உணவுகளை கண்டு பயப்படுகிறது. அதனால் குளிர்ச்சியாக சாப்பிடும் உணவுகளை தவிர்த்திடுங்கள்.
கல்லீரல்:
கல்லீரல் உள்ளுறுப்பாக இருக்கிறது, ஏனென்றால் நாம் சாப்பிடுபவற்றில் உடலுக்கு நன்மை செய்ய கூடியது மற்றும் தீங்கு செய்வது உள்ளிட்டவற்றை தரம் பிரித்து உடலுக்கு கேடு விளைவிப்பவற்றை உடனடியாக வெளியேற்றும் வேலையை செய்கிறது, இவை கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் மது அருந்துவதை கண்டு பயப்புடுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |