அழற்சியை ஏற்படுத்தும் உணவுகள் இவைதான்..! | Allergy Food List in Tamil

Advertisement

Allergy Food Items in Tamil

வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் அனைவர்க்கும் பயனுள்ள ஒரு தகவலை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக எப்போதாவது உணவு அழற்சி ஏற்படுவது வழக்கம் என்றாலும், ஒரு சிலருக்கு தொடர்ந்து உணவு ஒவ்வாமை ஏற்படும். இதற்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகளே காரணம். நம் எடுத்துக்கொள்ளும் சில உணவுகள் அழற்சியை ஏற்படுத்தும் என்பது நமக்கு தெரியும். ஆனால்,என்னென்ன பொருட்கள் என்பது நமக்கு தெரியாது.ஆகையால் இப்பதிவின் மூலம் அழற்சியை உண்டாக்கும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் தான் நமக்கு அழற்சியை ஏற்படுத்துகிறது. உடலிற்கு பல ஊட்டச்சத்துக்களை அளித்தாலும், கூடவே ஒரு சில அழற்சியையும் ஏற்படுத்துகிறது. ஆகையால், உங்களுக்கு உணவு மூலம் ஏதேனும் அழற்சி ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால் அந்த உணவுகளை தவிர்த்து கொள்ளுங்கள்.

What is The Most Common Allergy Food in Tamil:

பால்:

 allergy food list in tamil

நம் உடலிற்கு அணைத்து விதமான ஊட்டச்சத்துக்களை அளிக்கக்கூடியது பால். அனால், பாலிலும் அழற்சி ஏற்படுத்தும் தன்மை உள்ளது. எந்த வயதினருக்கும் பால் ஒவ்வாமை ஏற்படலாம்.

முட்டை:

 list of all allergens in food in tamil

முட்டை , உடலில் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டாலும் ஒரு சிலர்க்கு முட்டையினால் சோலா அழற்சிகள் ஏற்படுகிறது.

சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்த கூடாத உணவுகள்..!

வேர்க்கடலை:

 list of all allergens in food in tamil

வேர்க்கடலையை விரும்பி சாப்பிடாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. மாலை நேரங்களில் பெரும்பாலானவர்கள் சாப்பிடக்கூடிய ஒன்று. ஆனால், அழற்சியை ஏற்படுத்தக்கூடிய ஒன்று.

சோயா:

 what is the most common allergy food in tamil

சோயா உடலிற்கு மிகவும் நல்லது என்றாலும் ஒரு சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தக்கூடியது. பெரும்பாலும் குழந்தைகளுக்கு சோயாவினால் ஒவ்வாமை ஏற்படுகிறது. சோயா ஒவ்வாமை ஏற்பட்டால் சோயா பால், டோஃபு, சோயா சாஸ் போன்ற உணவுகளை தவிர்த்து கொள்வது நல்லது.

அக்ரூட் பருப்புகள் மற்றும் முந்திரி போன்றவை:

பிரேசில் கொட்டைகள், பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா போன்றவற்றால் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இவைகள் உண்றபிறகு உங்களுக்கு ஏதேனும், அழற்சி உண்டானால் மரக்கொட்டைகள் என்று அழைக்கப்படும் விதைகளை உண்பதை தவிர்த்து  கொள்ளுங்கள்.

கோதுமை:

 allergic food in tamil

கோதுமை பெரும்பாலானவர்களுக்கு அழற்சியை ஏற்படுத்தக்கூடியது. ஆகையால், கோதுமையினால் அழற்சி ஏதும் ஏற்படின் கோதுமை உணவுகளை தவிர்த்துக்கொள்வது நல்லது.

கார்போஹைட்ரேட் இல்லாத உணவுகள் என்னவென்று தெரியுமா?

மீன் வகைகள்:

 allergy food items in tamil

மீன் வகைகள் சில நேரங்களில் அழற்சியை ஏற்படுத்தலாம். அதாவது, அசுத்தமான மீன் யாராவது எடுத்துகொள்ளும் போதும் அல்லது மீனை சரியான முறையில் சுத்தம் செய்யாத போதும் இந்த ஒவ்வாமை உண்டாகலாம். மேலும், இறால் போன்ற மட்டிகளும் அழற்சியை ஏற்படுத்தக்கூடும்.

Food Allergy Symptoms in Tamil:

  • மூச்சுத்திணறல்
  • சுவாசிப்பதில் சிரமம்
  • இருமல்
  • குரல் தடை
  • தொண்டை இறுக்கம்
  • வயிற்று வலி
  • வாந்தி
  • வயிற்றுப்போக்கு
  • அரிப்பு, நீர் அல்லது வீங்கிய கண்கள்
  • படை நோய்
  • சிவப்பு புள்ளிகள்
  • வீக்கம்
  • இரத்த அழுத்தம் குறைதல், மயக்கம்

புரத சத்து அதிகம் உள்ள உணவுகள் 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement