சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்த கூடாத உணவுகள்..!

Advertisement

இந்த உணவுகளை எக்காரணம் கொண்டும் சூடுபடுத்த வேண்டாம்! Reheating Food Side Effects in Tamil

பொதுவாக ஏற்கனவே சமைத்த சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதினால் பல வகையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டின் இருக்கும். அவ்வாறு மீண்டும் சூடு செய்து சாப்பிட கூடாத உணவுகள் எதுவென்று உங்களுக்கு தெரியுமா? ஒருவேளை உங்களுக்கு தெரியாது என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஆக இங்கு ஏற்கனவே சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்த கூடாத உணவுகள் எது என்பதை பதிவு செய்துள்ளோம் அதனை இப்பொழுது ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சிக்கன்:

அசைவ பிரியவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு சிக்கன். சிக்கனில் நிறைய வகையான உணவுகளை நாம் எப்படி செய்தலால் அதனுடைய சுவை அப்படி இருக்கும். இதன் காரணமாகவே சிக்கனை சமைக்கும் போது கொஞ்சம் கூடுதலாக சமைப்பார்கள், ஏன் என்றால் அதனை அடுத்த வேளைக்கும் சைடிஷாக தொட்டுக்கொள்ளலாம் என்று. அனால் சிக்கனை சூடுபடுத்தி சாப்பிடுவது நல்லதல்ல. ஏன் என்றால் சிக்கனில் உள்ள புரதம் மீண்டும் சூடுபடுத்தும் போது இதிலுள்ள புரத விகிதங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு ஸ்பூன் வெந்தயம் போதும் 3 கிலோ வரை தொப்பை குறைய..!

கீரை:

கீரையை சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்கவும். ஒருமுறை சமைத்த பின்பு மீண்டும் சூடுபடுத்தும்போது அதில் உள்ள நைட்ரேட் ஊட்டச்சத்துக்கள் உடைந்து போய், நச்சுத் தன்மை கொண்டதாக மாறும்.

முட்டை:

முட்டையை ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது.. வேகவைத்த அல்லது வறுத்த முட்டைகள் எதுவாக இருந்தாலும் கட்டாயம் மீண்டும் சூடுசெய்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். முட்டைகளை மீண்டும் சூடாக்குவதால் நச்சுத்தன்மையுடையதாக மாறும், இது செரிமானப் பாதையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதோடு முட்டை சாப்பிடுவதே அதிலுள்ள அதிகப்படியான புரதத்திற்காக தான. மீண்டும் சூடுபடுத்தினால் அவற்றிலுள்ள புரதங்கள் உடைந்து அழிந்து போகும்.

காளான்:

காளானை சூடுபடுத்தும்போது செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும். காளானை மீண்டும் சூடாக்கும் போது அதிலுள்ள புரதக் கலவைகளில் மாறுாடுகள் உண்டாகும், இந்த புரத அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும் போது அது உடலின் செரிமான அமைப்பு மற்றும் இதயத்திற்கு ஆபத்தை தரும்.

சாதம்:

சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அதில் நச்சுத்தன்மை அதிகரிக்கலாம். அதாவது சாதத்தை சமைத்து கொஞ்சம் நேரத்திலேயே சாப்பிடுவது தான் நல்லது. அதை குளிர்வித்து, மீண்டும் சூடுசெய்யும்போது அதந்த பாக்டீரியாக்களில் உள்ள நுண் கிருமிகள் உற்பத்தி பெருகி, அழிந்து அதற்குள்ளேயே தங்கியிருக்கும். இது வாந்தி, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் நச்சுகளை உருவாக்கிவிடும்.

உருளைக்கிழங்கு:

சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன. சமையல் எண்ணெயை அதிகமாக சூடு செய்யக் கூடாது. அப்படி சூடாக்கப்பட்டால் அது மிகவும் ஆபத்தான டிரான்ஸ் கொழுப்புகளாக மாறும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் போதும் வறண்டு காணப்படும் முகம் சட்டுனு மிருதுவா மாறிவிடும்..!

சமையல் எண்ணெய்:

எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப பயன்படுத்தக் கூடாது. சமையல் எண்ணெயை அதிகமாக சூடு செய்யக் கூடாது. அப்படி சூடாக்கப்பட்டால் அது மிகவும் ஆபத்தான டிரான்ஸ் கொழுப்புகளாக மாறும்.

பீட்ரூட்:

பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது. சூடுபடுத்தி சாப்பிடுவதால் அதிலுள்ள சத்துக்கள் குறைந்து போய்விடும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement