Do Children Cry in Their Mother’s Womb in Tamil
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் பார்க்கப் போகின்றோம். பொதுவாக நம்மில் பலருக்கும் தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு எங்கள் பொதுநலம்.காம் பதிவு பயனுள்ளதாக இருக்கும். இவ்வுலகில் நாம் தெரிந்து கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் தாயின் கருவறையில் இருக்கும் குழந்தை அழுவுமா..? அழுவாதா என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க பிரண்ட்ஸ் இந்த பதிவை படித்தறிவோம்.
முதல் மாதத்தில் கர்ப்பத்தின் அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா
தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை அழுவது உண்மையா..? பொய்யா..?
பொதுவாக ஒரு பெண்ணிற்கு மிகபெரிய வரமே குழந்தை பாக்கியம் தான். அப்படி ஒரு குடும்பத்தில் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்றால் அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் அவளை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் பார்த்து கொள்வார்கள்.
அவள் அந்த குழந்தையை பெற்றெடுக்கும் வரை அவளுக்கு ஒவ்வொன்றையும் பார்த்து செய்வார்கள். அப்படி கர்ப்பமாக இருக்கும் பெண் அந்த நேரத்தில் சத்தான உணவுகளை உண்ண வேண்டும்.
அதேபோல கர்ப்பமாக இருக்கும் போது சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். காரணம் தாய் என்ன நிலையில் இருக்கிறார்களோ அதே நிலையில் தான் குழந்தையும் இருக்கும் என்று சொல்வார்கள்.
கர்ப்பமாக இருக்கும் போது செய்யக்கூடாதவை என்ன தெரியுமா
அதாவது அம்மா சந்தோஷமாக இருந்தால் தான் குழந்தையும் சந்தோஷமாக இருக்கும் அதேபோல தாய் கவலையாக இருந்தால் குழந்தையும் கவலையாக இருக்கும் என்று சொல்வார்கள்.
அப்போ தாய் அழுதாள் குழந்தையும் அழும் தானே, என்று யோசிப்பீர்கள். ஆனால் குழந்தை பொதுவாக தாயின் வயிற்றில் இருக்கும் போது அழுமாம்.
உடனே நீங்கள் அந்த அழுகை சத்தம் ஏன் வெளியில் கேட்கவில்லை என்று யோசிப்பீர்கள். அதற்கான காரணத்தை இங்கு காணலாம்.
தாய் அழுதாள் தான் குழந்தை அழும் என்று இல்லை. சாதாரணமாகவே குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது அழுவும் என்பது முற்றிலும் உண்மை. ஆனால் அந்த குழந்தை அழுவது அந்த தாய்க்கே கேட்காது. அப்றம் எப்படி வெளியில் கேட்கும் சொல்லுங்கள்.
இதையும் கடைபிடியுங்கள் 👉👉 கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டிய உணவு அட்டவணை
ஒரு குழந்தையின் முதல் அழுகை பிரசவ அறையில் அல்ல, கருப்பையிலே ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வீடியோ பதிவு செய்யப்பட்ட அல்ட்ராசவுண்ட் படங்களின் உதவியுடன், தாயின் அடிவயிற்றில் ஒலிக்கும் குறைந்த டெசிபல் சத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக குழந்தை அழுவதை கண்டறிந்துள்ளனர்.
இதற்கு காரணம்: பொதுவாக பிறந்த குழந்தைகள் எப்படி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அழுகிறார்களோ..? அதாவது, பசித்தால் அழுவது, உடலில் ஏதாவது வலி என்றால் அழுவது, இதுபோன்ற தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அழுவதை போலவே, வயிற்றில் இருக்கும் குழந்தையும் அழுகிறது என்று சொல்கிறார்கள்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |