திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஈசியாக டிக்கெட் பெறுவது எப்படி.?

Advertisement

How To Book Tirumala Darshan Tickets Easily

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கக் கூடிய எளிமையான வழி பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. திருப்பதி ஏழுமலையான் கோவிலை தரிசனம் செய்வது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதாவது,  ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட்டுகள் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. 300 ரூபாய் டிக்கெட் கிடைக்காமல் பல பேர் ஒரு நாள் முழுவதும் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள். திருப்பதி செல்ல 300 ரூபாய் தரிசன டிக்கெட் இல்லாதவர்களும், மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க முடியாதவர்களும் எப்படி ஈசியாக ஏழுமலையானை தரிசனம் செய்வது என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க

திருப்பதி செல்லும் பக்தர்கள் ஒரு மாதத்திற்கு முன்பாகவே டிக்கெட் புக் செய்து விடுவார்கள். ஆனால், சில நேரங்களில், ஆன்லைனில் டிக்கெட் விரைவில் தீர்ந்து விடும். இதனால், பெரும்பாலானவர்கள் தரிசன டிக்கெட் கிடைப்பது இல்லை. இப்படி உள்ளவர்கள் எப்படி திருப்பதி தரிசனம் டிக்கெட் பெறுவது என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

மகா சிவராத்திரி அன்று ஈஷா கோவிலுக்கு செல்ல ஆன்லைனில் இலவசமாக டிக்கெட் புக் செய்வது எப்படி.?

How to Book Tirumala Darshan Tickets Through APSRTC in Tamil:

ஆர்டிசி பஸ்களில் திருப்பதி செல்வதன் மூலம், நீங்கள் பஸ் டிக்கெட்டுடன் சேர்த்து திருப்பதி தரிசனம் டிக்கெட்டுகளையும் பெறலாம். APSRTC ( Andhra Pradesh State Road Transport Corporation) உடன் TSRTC ( Telangana State Road Transport Corporation) -யும் இந்த டிக்கெட்டுகளை வழங்குகிறது. 

How to Book Tirumala Darshan Tickets Through APSRTC in Tamil

TSRTC மூலம் டிக்கெட் பெற வேண்டுமானால் ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு முன்பே முன் பதிவு செய்தால் போதுமானது. தெலங்கானாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பதிக்கு TSRTC பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் பயணிக்கும் பயணிகளில் 1000 பயணிகளுக்கு தினமும் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல்,  திருப்பதி செல்லும் ஆர்டிசி டிக்கெட் ரூ.300 ஸ்ரீவாரி சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை ஒரே நேரத்தில் www.tsrtconline.in என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி தரிசனம் 300 டிக்கெட் ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி ..?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement