Epic Number Meaning in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Epic Number என்றால் என்பதை (Epic Number Meaning in Tamil) விவரித்துள்ளோம். Epic Number பற்றி நம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், Epic Number என்றால் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் Epic Number Meaning in Tamil கொடுத்துள்ளோம்.
எனவே, நீங்கள் Epic Number பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Voter ID Card ஆன்லைனில் Download செய்வது எப்படி?
What is Epic Number in Tamil:
EPIC எண் என்பது, வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகும். அதாவது, ஒரு தனிநபரின் வாக்காளர் அட்டையில் முதன்மையாக அமைந்துள்ள ஒரு தனித்துவமான 10-இலக்க எண் அடையாளங்காட்டி ஆகும். ஒவ்வொரு வாக்காளர் அட்டையிலும் தனித்த EPIC எண் இருக்கும். இது வாக்காளர்களின் தனித்துவத்தை அங்கீகரிக்க அரசாங்கத்திற்கு உதவுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட, வாக்காளர் அடையாள அட்டை 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்களுக்கு அடையாளச் சான்றாக செயல்படுகிறது. இன்னும் தெளிவாக சொல்லப்போனால், EPIC என்பது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையைக் குறிக்கிறது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து இந்திய குடிமக்களுக்கும் குறிப்பிடத்தக்க அடையாள வடிவமாக இது செயல்படுகிறது.வாக்காளர் அட்டையில் புகைப்படத்தின் மேலே Epic Number கொடுக்கப்பட்டிருக்கும்.
தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்
How To Find Epic Number Online in Tamil:
- முதலில், தேசிய வாக்காளர் சேவை இணையதளத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அப்பக்கத்தில் உங்களின் பெயர், பிறந்த தேதி, தந்தை அல்லது கணவரின் பெயர், பாலினம் மற்றும் மாநிலம் போன்ற விவரங்களை உள்ளிட்ட வேண்டும்.
- அதன் பிறகு, கேப்ட்சா குறியீடு உள்ளிட்டு Search என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியாக பொருந்தினால், EPIC எண் ஸ்கீரினில் காட்டப்படும். இதன் மூலம் உங்கள் Epic Number -ஐ தெரிந்துகொள்ளலாம்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |