How High Should a Ceiling Fan be From The Floor
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த வெயில் காலத்தில் சிறிது நேரம் கூட காற்று இல்லாமல் இருக்க முடியாது. ஃபேனில் இருந்து எவ்வளவு காற்று வந்தாலும் போதாது என்று தான் சொல்லுவோம். அப்படி நாம் வீட்டில் இருக்கும் சீலிங் ஃபேன் வேகம் குறைவாக இருந்தால் சொல்லவே வேண்டாம். இந்த ஃபேன் ஏன் இவ்வளவு கம்மியாக சுற்றுகிறது என்று எரிச்சல் அடைவோம். உங்கள் சீலிங் ஃபேன் நன்றாக இருந்தும், அதில் இருந்து அதிக காற்று வரவில்லை என்றால், சீலிங் ஃபேன் நன்றாக பொருத்தவில்லை என்று தான் அர்த்தம். ஆகையால், இப்பதிவில் வாயிலாக சீலிங் ஃபேன் நல்ல காற்று வர தரையிலிருந்து எவ்வளவு அடி உயரத்தில் தொங்க விட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
How Far Should a Ceiling Fan be From The Floor in Tamil:
AC ஒருபுறம் இருந்தாலும், ஒவ்வொரு அறையிலும் சீலிங் ஃபேன் கட்டாயம் இருக்கும். சீலிங் ஃபேனிலிருந்து அதிக காற்று வேண்டுமானால், குறிப்பிட்ட உயரத்தில் பொருத்துவது கட்டாயம். லிங் ஃபேனை முறையாக பொருத்தினால் தான் காற்று நன்றாக வரும். ஆனால், அறையின் தரையில் இருந்து சீலிங் ஃபேன் எவ்வளவு உயரத்தில் தொங்கவிட வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ஆகவே, அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
நல்ல காற்றோட்டம் கிடைக்க சீலிங் ஃபேனை தரையிலிருந்து 8 முதல் 9 அடி உயரத்தில் தொங்கவிடப்பட வேண்டும். இந்த உயரத்தில் சீலிங் ஃபேனை பொருத்தினால் தான் முழு அறைக்கும் அதிகபட்ச காற்றோட்டத்தை வழங்கும். காற்றோட்டம் மற்றுமின்றி பாதுகாப்பான முறையும் இதுதான்.சீலிங் ஃபேனிற்கு கீழே குறைந்தது 8 அங்குலங்கள் இருக்க வேண்டும். மிக அதிக உயரத்தில் பொருத்தினாலும் மிக குறைவான உயரத்தில் பொறுத்தினாலும், ஃபேன் வேகமாக சுற்றினாலும் காற்று குறைவாகவே கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், 7 அடிஅல்லது 6 அடி உயரத்தில் பொருத்தினால் கைகள் பட்டு காயங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. முக்கியமாக கைகள் தொடும் உயரத்திற்கு சீலிங் ஃபேன்களை பொருத்தக்கூடாது. எனவே, 8 முதல் 9 அடி உயரத்தில் பொருத்துவது தான் அனைத்திற்கும் சிறந்தது.
சீலிங் ஃபேனை 8 முதல் 9 அடி உயரத்தில் பொருத்தினால் மட்டுமே காற்று நன்றாக வரும். மேலும், மின் விசிறி இறக்கைகளின் வட்டத்திற்கு வெளியே குறைந்தது 6 அங்குலத்திற்கு எதுவும் இருக்கக்கூடாது. இவ்வாறு இருந்தால் தான் காற்று வேகமாக வீசும்.
சீலிங் பேன் வேகம் குறைவாக உள்ளதா.! அப்போ இப்படி பண்ணுங்க ஸ்பீடு அள்ளும்..
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |