How to Choose Soap in Tamil
நம் முன்னோர்களின் காலத்தில் குளிப்பதற்கு சோப்பை பயன்படுத்த மாட்டார்கள். ஏனென்றால் இயற்கையான முறையில் மூலிகைகளை பயன்படுத்தி குளித்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பிறந்த குழந்தைக்கு முதல் வயதானவர்கள் வரை அனைவரும் சோப்பை பயன்படுத்தி தான் குளிக்கிறார்கள். அதிலும் வீட்டில் ஐந்து நபர்கள் இருக்கிறார்கள் என்றால் ஒவ்வொருவரும் ஒவ்வஒரு மாதிரியான சோப்பை பயன்படுத்தி குளிக்கிறார்கள்.
இந்த சோப்பை ஒரே சோப்பையும் பயன்படுத்த மாட்டோம். புதிதாக சோப் வந்தால் கூட அதனை வாங்கி பயன்படுத்துவோம். அது போல சோப் வாங்கும் போது சில விஷயங்களை பார்த்து வாங்க வேண்டும். அவை என்னென்ன விஷயங்கள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
சோப் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை:
சோப் வாங்கும் போது நம்முடைய ஸ்கின் டைப்பிற்கு ஏற்றதா என்று பார்த்து வாங்க வேண்டும், அடுத்து சோப் கவரை பார்த்து வாங்க வேண்டும் என்று சரும மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
BIS தர நிலையம் சோப்பை மூன்று வகைகளாக பிரித்துள்ளனர். சோப்பின் கவரில் TFM( Total Fatty Matter ) இது 75 முதல் 80% வரை இருந்தால் Grade 1 என்று அர்த்தம்.
70% முதல் 75%வரை இருந்தால் Grade 2
65% முதல் 70 வரைக்கும் இருந்தால் Grade 3
சோப் ஆனது உப்பு, கொழுப்பு, காரம் மூன்று சேர்ந்து தான் தயாரிக்கிறார்கள். இந்த சோப்பில் கொழுப்பு அதிகமாக இருந்தால் தான் நம்முடைய ஸ்கின்ரிற்கு நல்லது. இதனை தான் TFM என்று குறிக்கிறார்கள். அதனால் நீங்கள் சோப் வாங்கும் போது கவரில் TFM 75-க்கு மேல் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
உங்களுடைய ஸ்கின் ட்ரை ஸ்கின் ஆக இருந்தால் Triclosan and Triclocarban, sodium lauryl sulfate, sodium laureth sulfate இவை மூன்றும் இல்லாததாக வாங்க வேண்டும்.
குளிக்கும் போது செய்யும் தவறுகள்:
வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி சோப்பை பயன்படுத்த வேண்டும். ஒரே சோப்பை பயன்படுத்தினால் மற்றவர்களுக்கு உள்ள ஸ்கின் அலர்ஜி உங்களுக்கு ஏற்படும். அதனால் தனித்தனியாக சோப்பை பயன்படுத்துங்கள்.
அது போல சோப்பை பல முறை பயன்படுத்த கூடாது, இரண்டு தடவைக்கு மேல் சோப்பை பயன்படுத்த கூடாது. சில பேர் 3 அல்லது 4 முறை சோப்பை பயன்படுத்தி கொண்டே தேய்ப்பார்கள். இதனை தவிர்க்க வேண்டும்.
அடுத்து உடலில் உள்ள அழுக்கை தேய்ப்பதற்கு பிளாஸ்டிக் நார் அல்லது ஆர்கானிக் நார் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். இதனால் தோலானது உரியும். அதனால் உங்களின் கைகளை பயன்படுத்தி தேய்த்தாலே போதுமானது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |