தந்தை சொத்தை பிரிக்காமல் இறந்து விட்டால் எப்படி பிரிக்க வேண்டும்?

Advertisement

தந்தை சொத்தை பிரிக்காமல் இறந்து விட்டால் எப்படி பிரிக்க வேண்டும்?

என்ன தான் கூட பிறந்தவர்களாகவும் சரி, ஒரே தட்டில் சாப்பிட்டவர்களாக இருந்தாலும் சரி சொத்து என்றால் பகையாளியாக மாறி விடுகிறார்கள். இதனை பெரியவர்கள் அழகாக கூறுவார்கள், 10 வயது வரைக்கும் அண்ணன், தம்பி 11 வயதில் பங்காளி என்று கிராமத்தில் கூறுவார்கள். அந்த வகையில் இறப்பு என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக தான் இருக்கிறது. அந்த வகையில் அப்பா சொத்துக்களை பிரிக்காமல் இருக்கிறார் என்று வைத்து கொள்வோம். இவர் திடீரென விபத்திலோ அல்லது எதிர்பாராமல் இறந்து விட்டார் என்றால் அந்த சொத்துக்கள் பிரிப்பதில் ஒரு போர்க்களமே நடக்கும். அதனால் தான் இந்த பதிவில் அப்பா  சொத்தை பிரிக்காமல் இறந்து விட்டால் எப்படி பிரிக்க வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.

தந்தை சொத்தை பிரிக்காமல் இறந்து விட்டால் எப்படி பிரிக்க வேண்டும்?

பொதுவாக யாருமே நல்லா இருக்கும் போது சொத்தை பிரித்து வைக்க மாட்டார்கள். ஏனென்றால் நாம் என்ன இப்போவா இறக்க போகிறோம் அதற்கு நாள் இருக்கிறது என்று நினைப்போம். அதனால் கடைசி காலம் அல்லது உடம்பிற்கு முடியாத நிலையில் தான் சொத்தை பிரிப்பதை பற்றியேநினைப்போம். ஆனால் இறப்பு என்பது எதிர்ப்பராமல் நிகழ கூடியது. அப்பா சொத்தை பிரிக்காமல் இறந்து விட்டால் சொத்தை எப்படி பிரிக்க வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.

முதலில் தந்தை இறந்ததும் இறப்பு சான்றிதழ் வாங்க வேண்டும், அதன் பிறகு இறப்பு சான்றிதழ் வாங்கிய பிறகு வாரிசு சான்றிதழ் எடுக்க வேண்டும். இரண்டு பிள்ளைகள் இருக்கிறீர்கள் என்றால் நாங்க தான் இவருடைய வாரிசுகள் என்று வாரிசு சான்றிதழ் எடுக்க வேண்டும்.

அடுத்து எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் அவர்களிடம் சொத்தை பிரிக்க போகிறேன் உனக்கு சம்மதமா என்று கேட்ட பிறகு தான் சொத்தை பிரிக்க வேண்டும். இதில் வம்சாவழி சொத்துக்கள் இருக்கும். அதாவது தாத்தாவின் சொத்துக்கள் அப்பா பயன்படுத்திருப்பார்கள். அடுத்து அதனை பிள்ளைகள் பயன்படுத்தலாம்.

இரண்டு மனைவி இருந்தால்:

தந்தைக்கு இரண்டு மனைவி இருந்தால் இரண்டாவது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா என்ற சந்தேகம் இருக்கும். முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அந்த சொத்தில் பங்கு கேட்கலாம். அதுவே முறைப்படியாக செய்யா விட்டால் பரம்பரை சொத்தில் பங்கு கேட்க முடியாது. அதுவே தந்தை சுயசம்பாத்தியசொத்து இருந்தால் அதனை இரண்டாவது மனைவி பங்கு கேட்கலாம்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link

 

Advertisement