இறந்தவர்களின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது எப்படி
மனிதர்களின் வாழ்க்கையில் அடுத்தநிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாது. அதனால் வாழும் ஒவ்வொரும் நொடி பொழுதையும் மகிழ்ச்சியாகவும், பயனுள்ளதாகவும் வாழுங்கள். அது போல பணம் என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அப்படி இருக்கையில் நம் குடும்பத்தில் உள்ளவர்கள் திடீரென்று இறந்து விடுகிறார்கள் என்றால் அவர்களுடைய வங்கி கணக்கில் பணம் வைத்திருக்கிறார்கள். இதனை எப்படி எடுப்பது என்ற சந்தேகம் இருக்கும். அவர்களுடையாய் ATM கார்டு இருந்தால் அதன் மூலமாக பணத்தை எடுத்து விடலாம் நினைப்பார்கள். ஆனால் இது போல எடுக்கலாமா, எடுப்பதற்கான வழிகள் போன்றவற்றை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
ATM மூலமாக பணம் எடுப்பது:
இன்றைய காலத்தை பொறுத்தவரை வரும் வங்கிக்கு சென்று செல்லான் நிரப்பி பணத்தை எடுப்பதில்லை, காரணம் ஸ்மார்ட் போன் இருக்கு UPI மூலமாக பணத்தை செலுத்துகிறார்கள். அப்படி இல்லையென்றால் ATM கார்டு அப்ளை செய்து பணத்தை எடுத்து கொள்கிறார்கள்.
உங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு நபர் இறந்து விட்டால் அவருடைய வங்கி கணக்கில் உள்ள தொகையை ATM கார்டு மூலம் எடுப்பது சட்டத்திற்கு விரோதமான ஒன்றாகும். மேலும் நாமினி வங்கிக்கு தெரியாமல் பணத்தை எடுத்தாலும் சட்டப்படி தவறான ஒன்றாகும். அப்படி நீங்கள் பணத்தை எடுத்தால் சிறை தண்டனை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணத்தை எடுப்பதற்கான வழிகள்:
இறந்தநபரின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுத்தால் அதற்கு விதிமுறைகள் உண்டு அதனை பற்றி அறிந்து கொள்வோம்.
முதலாவதாக நாமினி ஒருவராக இருந்தால் இறந்தவரின் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். அதுவே நாமினி நிறைய பேர் இருந்தால் வங்கியில் கடிதம் எழுதி கொடுத்த பிறகு தான் பணத்தை எடுக்க முடியும்.
அதுமட்டுமில்லமால் நீங்கள் வங்கிக்கு சென்று படிவத்தை நிரப்ப வேண்டும், அதோடு , இறந்தவரின் பாஸ்புக், கணக்கின் டிடிஆர், இறப்பு சான்றிதழ் மற்றும் உங்கள் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு போன்றவற்றை இணைத்து வங்கியில் கொடுக்க வேண்டும். அதன் பிறகு தான் பணத்தை எடுக்க முடியும்.
நாமினி இல்லையென்றால் என்ன செய்வது:
ஒருவேளை வங்கி கணக்கு ஆரம்பிக்கும் போது நாமினி என்று யாரையும் குறிப்பிடவில்லை என்றால் அந்த தொகையை யார் எடுப்பது என்றால் வாரிசுதாரர் எடுக்கலாம். வங்கியில் படிவத்தை நிரப்பி அதோடு இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழையும் சேர்த்து வழங்க வேண்டும். அதிகாரிகள் ஆவணங்கள் சரியாக உள்ளதா என்று பணத்தை வாரிசுதாரருக்கு வழங்குவார்கள்.
இறந்தவர்களின் ஃபோட்டோவை வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்..? என்று உங்களுக்கு தெரியமா..?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |