மார்ச் 13 என்ன நாள் தெரியுமா.?

Advertisement

National Good Samaritan Day

நம்முடைய நாட்டில் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இதில் நமக்கு பிரபலமான நாட்கள் மட்டும் தான் நமக்கு தெரியும், மற்ற நாட்கள் எல்லாம் தெரியாது. ஆனால் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பண்டிகை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதனை பற்றி அறிந்து கொள்வது முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

எடுத்துக்காட்டாக மகளிர் தினம் எப்போது என்றாலும் சரி, மார்ச் 8 என்ன நாள் என்று கேட்டாலும் சரி சட்டுன்னு சொல்லி விடுவோம். இந்த நாட்கள் எல்லாம் எல்லாரும் அறிந்தது. இதுபோல் நமக்கு தெரியாத பல நாட்கள் உள்ளது. அதனையும் தெரிந்துகொள்வது அவசியமாக இருக்கிறது. எனவே, அந்த வகையில் இந்த பதிவில் மார்ச் 13 என்ன நாள் என்று அறிந்து கொள்ள போகின்றோம்.

National Good Samaritan Day in Tamil:

தேசிய நல்ல சமாரியன் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 13 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு புதன்கிழமை அன்று வருகிறது. இந்த நாள் ஆனது  மற்றவர்களுக்கு உதவி செய்யும் கருணை மற்றும் தொண்டு செயல்களை ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட நாள். தன்னலமற்ற சேவையின் ஆற்றலையும், பிறருக்கு உதவுவதற்கு மக்கள் மதிக்கப்படும் சமுதாயத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கும் ஒரு வாய்ப்பாகவும் இந்த நாள் இருக்கிறது.

எப்படியெல்லாம் உதவலாம்:

  • உங்கள் கூட இருப்பவர்கள் அல்லது தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று யாராவது பிரச்சனையில் இருந்தால் அவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
  • அடுத்து உணவு மற்றவர்களுக்கு தானம் செய்ய வேண்டும், அதாவது உணவு, உடை, பொருள் போன்றவற்றை தானமாக கொடுத்து உதவலாம்.
  • மற்றவர்களிடம் அன்பு காட்டுங்கள். இந்த அன்பு மூலமாக அவர்களுக்கு யாரும் இல்லை என்று நினைத்தாலும் நமக்கு அன்பு காட்ட ஒருவர் இருக்கிறார் என்ற நினைவு இருக்கும்.

National Good Samaritan Day History:

நேஷனல் குட் சமாரியன் தினமானது 1980 -களில் இருந்து கொண்டப்படுகிறது. அப்போது ஒரு பிரத்யேக தனிநபர்கள் குழு உலகளவில் கருணை மற்றும் தொண்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்க தேசிய நல்ல சமாரியன் தினத்தை நிறுவியது.

2010 இல், தொழில்நுட்பத்தின் மூலம் தேசிய நல்ல சமாரியன் தினம் மற்றும் நாம் ஒருவருக்கொருவர் கருணை காட்டுவதற்கான வழிகள் பற்றிய கூடுதல் தகவல்களைப் பரப்ப உதவியது. இப்போது, ​​ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 13 அன்று கொண்டாடப்படுகிறது.

National Good Samaritan Day Important:

இந்த நாளை கொண்டாடுவதன் மூலம் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் காணப்படும். எடுத்துக்காட்டாக ஒருவர் ரோட்டில் விழுந்து கிடந்தாலும் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ன எண்ணத்தை மக்களிடையே தூண்டுகிறது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link

 

Advertisement