March 14 Special Day in India
நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானதாக இருக்கிறது. இதில் ஒரு நிமிடத்தை கூட வீணடிக்க கூடாது என்று நினைப்போம். அப்படி இருக்கையில் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு தினம் என்று இருக்க கூடும். அதனை பற்றி நாம் அறிந்திருப்பதில்லை. காரணம் ஏதவாது பெரிய நாளாக இருந்தால் மட்டும் தான் எல்லாருக்கும் தெரிகிறது.
ஆனால் ஒரு மாதத்தில் 30 நாட்கள் இருக்கிறது. இந்த 30 நாட்களில் எல்லாமே சிறப்பு பெற்ற நாட்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் 25 நாட்களாவது ஏதாவது தினமாக இருக்கும். இந்த பதிவில் மார்ச் 14-ஆம் நாள் என்ன நாள் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
PI Day:
ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 14 அன்று பை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை வருகின்றது.
கணிதம், புள்ளியியல் மற்றும் இயற்பியலில் போன்ற பாடங்களில் பை என்பது ஒரு முக்கியமான குறியீடாக இருக்கிறது. இது வட்டத்தின் சுற்றளவுக்கும் விட்டத்திற்கும் உள்ள விகிதமாகும். விகிதம் 3.14 PI இன் மாறிலி. பை என்பது மிகவும் பரவலாக அறியப்பட்ட கணித மாறிலிகளில் ஒன்றாகும். இது அறிவியலுக்கு உள்ளேயும் வெளியேயும் கணக்கீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், பையின் நிலையான மதிப்பையும் , அது எவ்வாறு நமக்கு கணக்கீடுகளை எளிதாக்குகிறது என்பதையும் நினைவுகூரும் வகையில் பை தினம் அனுசரிக்கப்படுகிறது.
PI History:
பையின் நிலையான மதிப்பை முதலில் கண்டுபிடித்தது சைராகுஸின் ஆர்க்கிமிடிஸ் என்ற கணிதவியலாளர். 1737 ஆம் ஆண்டில், லியோன்ஹார்ட் ஆய்லர் பை சின்னத்தைப் பயன்படுத்தினார், எனவே அது அறிவியல் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1988 ஆம் ஆண்டில், அமெரிக்க இயற்பியலாளர் லாரி ஷா முதல் பை தினத்தை கொண்டாடினார். தற்போது புகழ்பெற்ற இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்தநாளில் பை தினமாக கொண்டாடப்படுகிறது.
எப்படி தினத்தை கொண்டாடுவது:
- இந்த பை தினத்தை ஏதாவது ஒரு ஸ்வீட் அல்லது கேக் போன்றவற்றில் π என்ற வடிவத்துடன் தயார் செய்து அதனை வெட்டி கொண்டாடுங்கள்.
- இந்த π-யின் முக்கியத்துவம் என்ன, அவை எதற்காக பயன்படுத்தகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
- π கண்டுபிடித்தவர், மற்றும் அவருடைய வரலாறை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |