தஞ்சை பெரிய கோவிலில் ஒளிந்திருக்கும் தங்கம் பற்றிய ரகசியம்!

Advertisement

Do you know about the Gold hidden in the Tanjore Great Temple?

பெருவுடையார் கோவில் என்றும் பிரகதீஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படும் தஞ்சாவூர் பெரிய கோவில் உங்களை திகைக்க வைக்கும் அதிசயங்களுள் ஒன்றாகும். வானத்தைத் துளைத்து, பழைய கடவுள்கள் மற்றும் இழந்த பேரரசுகளின் கதைகளைக் குறிக்கும் விரிவான செதுக்கல்களால் மூடப்பட்டிருக்கும் ஒரு பெரிய கல் பீரோவை கற்பனை செய்து பாருங்கள் அப்படிப்பட்டதுதான் இந்த கோவில். இது சோழ வம்சத்தின் கட்டிடக்கலை திறமைக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

பொதுவாக பெருவுடையார் கோவிலை பற்றி அறியாதவர் எவரும் இல்லை, இருப்பினும் அதில் நிறைய ரகசியங்கள் இருப்பதாக பேச்சி நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

தஞ்சை பெரிய கோவிலில் மறைந்துள்ள தங்க ரகசியம்!

 secret of gold hidden in the great temple of Tanjore

தஞ்சை பெரிய கோவிலை சுற்றியுள்ள சுவரில் பல கல்வெட்டுகளை நாம் பார்த்திருப்போம். அது பண்டைய காலத்து மொழியால் செதுக்கப்பட்டதால் அது நமக்கு எளிதாக படிப்பது போல் இருக்காது. அந்த கல்வெட்டில் அந்த காலத்து அரசரின் பெயர்கள், சிறப்புக்கள் மற்றும் பல வகையான சிறப்புகள் இடம் பெற்றிருக்கும், அதனை தொடர்ந்து பல ரகசியங்களும் ஒளிந்திருக்கும்.

இந்த கல்வெட்டில் தான் தங்கம் குறித்த சில தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றது. அந்த காலத்தில் பத்தரை மாற்று தங்கத்தை ‘தண்டவாணி‘ என்பர். அப்படியென்றால் இந்த வார்த்தை எங்கெல்லாம் இடம் பெற்றுள்ளோதோ அதில் தங்கத்தை பற்றிய ரகசியம் இருப்பதாக அறியப்படுகிறது.

தஞ்சை பெரிய கோவில் குறிப்புகள்..!

ராசராச சோழன் தஞ்சை பெருவுடையார் கோவில் பண்டாரத்துக்கு அளித்த பொன் அணிகலன்கள் மற்றும் பாத்திரங்கள் பற்றிய செய்தியை “உடையார் பண்டாரத்துப் பெண் கொடு செய்த” என்ற கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் “தண்டவாணிக்கு கால் மாற்று தண்ணியபொன்” என்று எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டின் பொருள் என்னவென்றால், இந்த வார்த்தையானது பத்தரை மாற்றுக்கு கால் மாற்று குறைந்த பொன் என்று பொருள், அதாவது தங்கத்துடைய அளவை துல்லியமாக குறிக்கின்றது. ஏனென்றால் தங்கத்தில் அரக்கு, பிஞ்சு போன்ற எடையும் கலந்திருக்கும்.

இவை அனைத்தும் கல்வெட்டு ஆய்வாளர்கள், பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு சொல்லப்பட்ட குறிப்புகளாகும்.

அடுத்தமுறை நீங்கள் தஞ்சாவூர் பெரிய கோவிளுக்கு செல்லும்போது இதை பற்றி எங்கேயும் படிக்கமுடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link

 

Advertisement