Why Is Bank Closed On 1st April in Tamil
பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நம் பதிவின் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்போகின்றோம். அதாவது ஏப்ரல் மாதம் தொடங்கிவிட்டது. இந்த ஏப்ரல் மாதத்தின் முதல் நாளை April Fools Day என்று சொல்வார்கள். இந்த நாளில் நாம் நம்மை சுற்றி உள்ளவர்களை பொய்யான ஒரு தகவலை கூறி April Fool என்று ஏமாற்றுவோம். அதிலும் நம்மில் பலரும் எந்த நாளை மறக்கிறோமோ இல்லையோ, ஏப்ரல் மாதத்தில் வரும் இந்த April Fool நாளை மட்டும் நாம் மறப்பதில்லை. அந்த அளவிற்கு இந்த நாளானது மிகவும் பேமஸ் ஆக இருக்கிறது.
அதுபோல இந்த ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று தான் அனைத்து வங்கிகளும் மூடப்படுகின்றன. அப்படி ஏப்ரல் 1 ஆம் தேதி ஏன் வங்கிக்கு விடுமுறை கொடுக்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? இல்லை இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள என்றாவது நினைத்திருக்கிறீர்களா..? அப்படி தெரிந்து கொள்ள நினைத்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே இப்பதிவின் வாயிலாக அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க. அதற்கு முன் முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!
ஏப்ரல் 1 ஏன் முட்டாள்கள் தினமாக கூறப்படுகிறது
ஏப்ரல் 1 ஆம் தேதி ஏன் வங்கிகள் மூடப்படுகின்றன..?
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் வங்கியானது ஏப்ரல் 1 ஆம் தேதி மூடப்படுகின்றன. நாமும் இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்திருப்போம். அதிலும் வங்கிகள் பொதுவாக சனி, ஞாயிறு போன்ற கிழமைகளில் தான் விடுமுறை விடுவார்கள்.
ஆனால் ஏப்ரல் 1 ஆம் தேதி என்ன நாளாக இருந்தாலும் அன்று வங்கிக்கு விடுமுறை தான் வழங்கப்படுகிறது. எனவே இதனை பற்றி நம்மில் பலருக்கும் பல கேள்விகள் எழுந்திருக்கும். அதனால் அதற்கான காரணத்தை இப்போது காணலாம்.
பொதுவாக இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மாநிலங்களில் ஆண்டு நிறைவுக்காக ஏப்ரல் 1 ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகின்றன.
அதாவது RBI – இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டரின் படி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருக்கும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் தங்கள் ஆண்டுக் கணக்குகளை முடிப்பதற்காக ஏப்ரல் 1 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த நாள் அன்று அதாவது ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று வங்கி பணியாளர்கள் தங்கள் நிதியாண்டின் இறுதிக் கணக்குகளை முடிப்பதில் தீவிரமாக செயல்படுவார்கள். அதனால் தான் இந்த நாளில் இந்தியா முழுவதும் இருக்கும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகின்றன.
மேலும் இந்த ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து தான் புதிய நிதியாண்டு (2024 – 2025) தொடங்குகிறது. இருந்தாலும் இந்தியாவில் இருக்கும் சில மாநிலங்களில் அதாவது, சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள வங்கிகள் ஏப்ரல் 1 ஆம் தேதி திறந்து இருக்கும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |