ரமலான் நோன்புவின் 27 -வது நாள் சிறப்பு என்ன தெரியுமா..?

Advertisement

Why The 27th Day Of Ramadan Fasting is Special in Tamil

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் நம் பதிவின் வாயிலாக ரமலான் நோன்புவின் 27 ஆம் நாள் சிறப்பு என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக ரமலான் நோன்பு நாட்கள் தொடங்கி முடியவே போகிறது. அதாவது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு மார்ச் 12 தேதி முதல் துவங்கி உள்ளது. அந்த தேதியில் இருந்து அவர்கள் இன்று வரை நாள் முழுவதும் விரதம் இருந்து வருகிறார்கள்.

அதுபோல அவர்கள் ரம்ஜான் நோன்புவின் போது அதிகாலை மட்டும் உணவு சாப்பிட்டுவிட்டு, அன்று முழுவது உண்ணாமல் விரதம் இருப்பார்கள். அந்த அளவிற்கு ரமலான் மாதமானது சிறப்பு பெற்றதாக இருக்கிறது. இருந்தாலும், அவர்கள் நோன்பு இருக்கும் நாட்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் என்றால், அது இந்த 27 ஆம் நாள் தான். அதனால் ஏன் இந்த 27 ஆம் நாள் மிகவும் சிறப்பு பெற்றதாக இருக்கிறது என்று இப்பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க.

ரம்ஜான் நோன்பு இருப்பவர்கள் இந்த விதிமுறைகளை Follow பண்ணுங்க..

ரமலான் நோன்புவின் 27 -வது நாள் சிறப்பு என்ன..? 

ரமலான் நோன்புவின் 27 -வது நாள் சிறப்பு என்ன

பொதுவாக இஸ்லாமியர்கள் இந்த புனித மதமான ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பார்கள். மேலும் இந்த நோன்பு காலத்தின் போது அவர்கள் சில விஷயங்களை அவர்கள் செய்யவே கூடாது. மேலும் ரமலான் நோன்பு காலத்தில் என்னென்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

சரி ரமலான் நோன்பு இருக்கும் நாட்களில் 27 ஆம் நாள் மட்டும் ஏன் சிறப்பாக இருக்கிறது என்று நம் அனைவருக்குமே ஒரு யோசனை வரும். சரி அதை பற்றி தெளிவாக காண்போம்.

ரமலான் மாதத்தில் உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்களுக்கு இந்த 27 ஆம் நாள் மிக முக்கியமான நாளாக இருக்கிறது. இந்த ரமலான் நோன்புவின் இறுதி பகுதியில் வரும் 27 ஆம் நாளானது லைலத்துல் கத்ர் அல்லது சக்தியின் இரவு என்று அழைக்கப்படுகிறது.

ரம்ஜான் நோன்பு எடுக்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்..

இந்த 27 ஆம் நாளான லைலத்துல் கத்ர் இரவை அடையப் போகின்றோம் என்று இஸ்லாமியர்கள் கூறி 27 வது இரவில் மாத்திரம் நின்று வணங்க வேண்டும். பின் தவ்பா என்ற பெயரில் ஆலிம்கள் சொல்லிக் கொடுக்கும் வாசகங்களை, நாம் அப்படியே கேட்டு மனப்பாடமாக சொலல் வேண்டும். பின் ஒரு வருடம் செய்த பாவமும் இந்த 27 வது நாளில் கேட்ட தவ்பாவினால் மண்ணிக்கப்பட்டு விட்டது என்று தங்கள் மனதில் மகிழ்ச்சி கொள்வார்கள்.

அதாவது இஸ்லாமியர்கள் செய்த பாவங்கள் இந்த 27 ஆம் நாளில் முழுமையாக நீங்கிவிடும் என்று நம்புகிறார்கள். அதனால் தான் இந்த ரமலான் நோன்பு காலங்களில் சின்ஹா 27 ஆம் தேதி மிகவும் சிறப்பு பெற்றதாக இருக்கிறது.

அதுபோல ரமழானின் 21, 23, 25, 27 மற்றும் 29 ஆகிய இரவுகள் லைலத்துல் கத்ர் அல்லது சக்தியின் இரவு என்று நம்பப்படுகிறது. அதனால் நபிகள் நாயகத்தின் அறிவுறுத்தல்களின்படி அவர்கள் இந்த இரவுகளை பிரார்த்தனையில் செலவிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ரமலான் நோன்பு காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்..

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement