LIC அறிமுகப்படுத்தும் ஜீவன் உத்சவ் பாலிஸி… அசத்தலான ஆயுள் காப்பீட்டு திட்டம்! LIC Jeevan Utsav Plan Details in Tamil
லைப் இன்சூரன்ஸ் ஆப் LIC பாலிசி ஒரு அருமையான LIC பாலிசியை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பாலிசியின் பயன்கள் என்ன என்பது குறித்த தகவலை பற்றி தான் நாம் இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். ஆக பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
LIC Jeevan Utsav Plan Details in Tamil:
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி), ‘ஜீவன் உத்சவ்’ என்ற புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நவம்பர் 29, 2023 அன்று தொடங்கப்பட்ட இந்த புதுமையான திட்டம், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான முதலீடாகவும் மற்றும் அதிக வருவாயை கொடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘ஜீவன் உத்சவ்’ திட்டம், பாலிசி காலத்தின் போது, காப்பீட்டாளர் துரதிர்ஷ்டவசமாக இறந்தால், காப்பீட்டாளர் பாலிசியின் முதிர்வுத் தொகையுடன் சேர்த்து, குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ICICI வங்கியில் 4,000 சேமித்தால் 2,91,557/- அளிக்கும் தாறுமாறாக திட்டம்..!
இந்த பாலிசியின் பயன்கள்:
பிரீமியம் செலுத்தும் காலம் அல்லது PPT என்பது உங்கள் ஆயுள் காப்பீட்டுக் கொள்கைக்கு தேவையான பிரீமியங்களை நீங்கள் செலுத்த வேண்டிய காலகட்டமாகும்.
இந்த பிரீமியம் செலுத்தும் காலம் முடிந்த பிறகு ஒரு குறிப்பிட்ட கால அளவு நீங்கள் காத்திருக்க வேண்டும். காத்திருந்த பிறகு நீங்கள் காப்பீட்டு தொகையாக இந்த பாலிசியில் எவ்வளவு தொகையை தேர்வு செய்து முதலீடு செய்திர்களோ அந்த தொகையினுடைய 10% தொகையை வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு ஒவ்வொரு வருடமும் வழங்குவார்கள்.
உதாரணத்திற்கு நீங்கள் 10 லட்சம் ரூபாய்க்கு இந்த ஜீவன் உத்சவ் பாலிசியை ஐந்து வருட கால அளவில் எடுத்திருந்தால். பாலிசியுடைய Premium Paying Term கால அளவான ஐந்து வருடம் முடிந்ததற்கு பிறகு அடுத்த ஐந்து வருடம் (Deferment Period) நீங்கள் எந்த ஒரு தொகையும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. Deferment Period-ஆன ஐந்து வருடம் கழித்தபிறகு உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வருடமும் காப்பீட்டு தொகையில் 10% தொகையான 1 லட்சம் ரூபாயை இந்த பாலிசியின் மூலமாக உங்களுக்கு வழங்குவார்கள்.
இந்த பாலிசி வாங்குவதற்கான தகுதி – LIC Jeevan Utsav Plan Details in Tamil:
எல்ஐசி ஜீவன் உத்சவ் பாலிசி வாங்குவதைக்கான குறைந்தபட்ச வயது தகுதி 90 நாட்கள் ஆகும். அதாவது ஒரு குழந்தை பிறந்த 90 நாட்களிலில் இருந்தே அந்த குழந்தையின் பெயரில் இந்த பாலிசியை வாங்கலாம். அதிகபட்ச வயது என்றால் 65 வயதிற்குள் இருப்பவர்கள் இந்த பாலிசியை வாங்கலாம்.
பிரீமியம் செலுத்தும் காலம் – Premium Paying Term:
இந்த பாலிசியில் பிரீமியம் செலுத்தும் காலம் 5 வருடம் முதல் 16 வருடம் வரை வழங்குகிறார்கள்.
எல்ஐசி ஜீவன் உத்சவ் பாலிசியின் Deferment Period:
- 5 வருடம் பிரீமியம் செலுத்தும் காலத்தை தேர்வு செய்திருந்தால் PPT காலமான 5 வருடத்திற்கு பிறகு மேலும் ஐந்து வரும் வரை காத்திருக்க வேண்டும்.
- அதுவே 6 வருட பிரீமியம் செலுத்தும் காலத்தை தேர்வு செய்திருந்தால் PPT காலமான 5 வருடத்திற்கு பிறகு 4 வருடம் வரை காத்திருக்க வேண்டும்.
- அதேபோல் 7 வருட பிரீமியம் செலுத்தும் காலத்தை தேர்வு செய்திருந்தால் PPT காலமான 5 வருடத்திற்கு பிறகு 3 வருடம் வரை காத்திருக்க வேண்டும்.
- அதுவே 7 முதல் 16 வருட பிரீமியம் செலுத்தும் காலத்தை தேர்வு செய்திருந்தால் PPT காலமான 5 வருடத்திற்கு பிறகு 2 வருடம் வரை காத்திருக்க வேண்டும்.
இந்த பாலிசி வாங்குவதற்கான காப்பீட்டு தொகை (sum assured):
குறிந்தபட்ச காப்பீட்டு தொகை (sum assured) 5 லட்சம் ஆகும்.
அதுவே அதிகபட்சம் என்று பார்த்தால் எந்த ஒரு வரம்பு இல்லை நீங்கள் எவ்வளவு காப்பீட்டு தொகையை (sum assured) வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.
sum assured Amount-ஆக நீங்கள் எவ்வளவு தொகையை தேர்வு செய்கிறீர்களோ அதனை பொறுத்து உங்களுக்கான பிரீமியம் செலுத்தும் தொகையானது மாறுபடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்தியன் வங்கியில் 300 ரூபா முதலீடு போட்டு 81,102 ரூபா பெற வேண்டுமா.?
இந்த பாலிசியின் பயன்களை இரண்டு விதமாக வழங்குகிறார்கள்:
Reuglar Income Benefits
அதாவது ஆப்சன் ஓன்று Reuglar Income Benefits ஆகும். இந்த Reuglar Income Benefits நீங்கள் தேர்வு செய்திருந்தால் பிரீமியம் செலுத்த கூடிய கால அளவு முழுவதும் உங்களுக்கான பிரீமியத்தை நீங்கள் செலுத்த வேண்டும். அதன் பிறகு உங்களுடைய Deferment Period முடிந்த பிறகு உங்களுடைய வாழ்நாள் முழுவதும் sum assured Amount-ஆக நீங்கள் எவ்வளவு தொகையை தேர்வு செய்கிறீர்களோ அந்த தொகையில் இருந்து 10% தொகையை ஒவ்வொரு வருடமும் உங்களுடைய வாழ்நாள் முழுவதும் வழங்குவார்கள்.
உதாரணத்திற்கு 10 லட்சம் ரூபாய் sum assured தொகையில் இந்த பாலிசியை வாங்கி இருந்தால் Premium Paying Term மற்றும் Deferment Period முடிந்த பிறகு உங்களுடைய வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வருடமும் இந்த sum assured தொகையில் 10% தொகையான 1 லட்சம் ரூபாயை ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு வழங்குவார்கள்.
Flexibility of defer & Accumulate:
இரண்டாவது ஆப்ஷனான Flexibility of defer & Accumulate-ஐ நீங்கள் தேர்வு செய்திருந்தால். பாலிசியினுடைய Premium Paying Term மற்றும் Deferment Period முடிந்த பிறகு உங்களுக்கு அந்த 10% தொகையை வாங்க மாட்டார்கள்.
ஆனால் உங்கள் LIC அக்கவுண்டில் சேர்த்து வைப்பார்கள் கூடவே அதற்கு 5.5% Compounding வட்டியை வருடாவருடம் வழங்குவார்கள். இதனால் நீங்கள் முதலீடு செய்த தொகை உங்களுக்கு கூடுதலாகவே கிடைக்கும். தேவைப்படும்பட்சத்தில் இந்த தொகையை 75% வரை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் Withdraw அதாவது எடுத்துக்கொள்ளலாம். கூடுதலாக இந்த ஆப்ஷனில் உங்களுக்கு லோன் பெரும் வசதியும் கிடைக்கும்.
Guranteed Addition:
இந்த பாலிசியில் Guranteed Addition வழங்குறாங்க, அதாவது நம் sum assured தொகையில் உள்ள ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 40 ரூபாய் Guranteed Addition வழங்குறாங்க.
Rideres:
- Accidental death and disability benefit rider
- Accidental benefit rider
- New term benefit rider
- LIC new critical illness benefit rider
- Premium waiver benefit rider
இந்த Rideres ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்யும் பட்சத்தில் அதற்கு நீங்கள் கூடுதலாக பிரீமியம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கனரா வங்கியில் 10,000 முதலீடு செய்தால் எவ்வளவு அசல் மற்றும் வட்டி கிடைக்கும்..!
உதாரணம்:
ஓரு நபர் தனது 30 வயதில் 10 லட்சம் காப்பீட்டு தொகையில் இந்த பாலிசியை 15 வருடம் பிரீமியம் செலுத்தும் கால அளவில் வாங்கியிருந்தால் அவர்களுக்கு ஒரு வரும் பிரீமியம் 64,300 ரூபாய் செலுத்த வேண்டும் ஒவ்வொரு வருடமும் 64,300 ரூபாய் செலுத்தினால் 15 வருடத்தில் 9,64,500 ரூபாயை செலுத்திருப்பாங்க. 15 வருடம் முடிந்த பிறகு Deferment Period-ஆக இரண்டு வருடம் காத்திருக்க வேண்டும். இரண்டு வருடம் முடிந்த பிறகு அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வருடமும் காப்பீட்டு தொகையில் 10% தொகையான 1 லட்சம் ரூபாயை வழங்குவார்கள்.
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |