Canara Bank fd 10000 Deposit Interest Rate in Tamil
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் சம்பாதிப்பதில் காட்டும் அதே அளவு அக்கறையை சம்பாதித்த பணத்தை சேமிப்பதிலும் காட்டுகிறார்கள். அப்படி சேமிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உள்ள சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் முதலில் தாங்கள் சேமிக்க இருக்கும் சேமிப்பு திட்டம் மற்றும் தாங்கள் சேமிக்க போகும் நிதி நிறுவனத்தை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள விரும்புவார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் கனரா வங்கியின் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 10000 சேமித்தால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள். மெச்சுரிட்டி
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கனரா வாங்கி பிக்சட் டெபாசிட் திட்டம்:
தகுதி:
இந்த கனரா வங்கியின் FD சேமிப்பு திட்டத்தில் சேமிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்.
சேமிப்பு தொகை:
இந்த FD திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம். அதிகபட்சம் 2 கோடி வரை செலுத்தலாம்.
சேமிப்பு காலம்:
இந்த திட்டத்தில் நீங்கள் 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை சேமிக்கலாம்.
வட்டி விகிதம்:
கனரா வங்கியின் FD சேமிப்பு திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 4.00% முதல் 7.75% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது. இந்த வட்டிவிகிதமானது நீங்கள் சேமிக்கும் தொகையினை பொருத்தும், நீங்கள் சேமிக்கும் காலத்தை பொறுத்தும் மாறுபடும்.
SBI வங்கியில் மாதம் 2,000 ரூபாய் சேமித்தால் 2 வருடத்தில் கிடைக்கும் வட்டி மற்றும் அசல் எவ்வளவு
உதாரணமாக..
ஜென்ட்ரல் சிட்டிசன்:
சேமிப்பு காலம் | டெபாசிட் தொகை | வட்டி தொகை | முதிர்வு தொகை |
1 வருடம் | 10,000 ரூபாய் | 708 ரூபாய் | 10,708 ரூபாய் |
3 வருடம் | 10,000 ரூபாய் | 2,260 ரூபாய் | 12,260 ரூபாய் |
5 வருடம் | 10,000 ரூபாய் | 4,009 ரூபாய் | 14,009 ரூபாய் |
7 வருடம் | 10,000 ரூபாய் | 5,922 ரூபாய் | 15,922 ரூபாய் |
சீனியர் சிட்டிசன்:
காலம் | டெபாசிட் தொகை | வட்டி தொகை | முதிர்வு தொகை |
1 வருடம் | 10,000 ரூபாய் | 761 ரூபாய் | 10,761 ரூபாய் |
3 வருடம் | 10,000 ரூபாய் | 2,442 ரூபாய் | 12,442 ரூபாய் |
5 வருடம் | 10,000 ரூபாய் | 4,358 ரூபாய் | 14,358 ரூபாய் |
7 வருடம் | 10,000 ரூபாய் | 6,479 ரூபாய் | 16,479 ரூபாய் |
போஸ்ட் ஆபீஸில் 5 லட்சம் முதலீடு செய்தால் வட்டி மட்டும் 2 லட்சம் கிடைக்கும் டைம் டெபாசிட் திட்டம்
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |