போஸ்ட் ஆபீஸில் 5 லட்சம் முதலீடு செய்தால் வட்டி மட்டும் 2 லட்சம் கிடைக்கும் டைம் டெபாசிட் திட்டம்..!

Advertisement

Post Office Time Deposit Interest Rate in Tamil

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் சம்பாதிப்பதில் காட்டும் அதே அளவு அக்கறையை சம்பாதித்த பணத்தை சேமிப்பதிலும் காட்டுகிறார்கள். அதேபோல் தங்கள் எதிர்கால நன்மைக்காக பணத்தை சேமிக்க விரும்பும் மக்கள் அவர்கள் தேர்வு செய்யும் டெபாசிட் முறைகள் மற்றும் சேமிக்கும் நிதி நிறுவனங்கள் பாதுகாப்பானவைகளா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கும் சிலர் பங்குச்சந்தை போன்றவற்றில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலான உழைக்கும் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படி நீங்களும் சேமிக்க விருபுகின்றிர்கள் என்றால் முதலில் நீங்கள் எந்த திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக பலன் கிடைக்கும் மற்றும் எந்த நிதிநிறுவனத்தில் சேமிப்பது என்பதை பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் போஸ்ட் ஆபீஸ் Time Deposit சேமிப்பு முறை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Post Office Time Deposit in Tamil:

Post Office Time Deposit in Tamil

தகுதி:

இந்த போஸ்ட் ஆபீஸ் Time Deposit சேமிப்பு திட்டத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் இணைந்து கொள்ளலாம்.

சேமிப்பு தொகை:

இந்த திட்டத்தில் 1000 ரூபாய் முதல் சேமிக்கலாம்.

வட்டிவிகிதம்:

இந்த திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 5.5% முதல் 7.5% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.

தபால் துறையில் மாதம் 4000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்

சேமிப்பு காலம்:

இந்த திட்டத்தில் உங்களுக்கு நான்கு முறையிலான சேமிப்பு காலம் வழங்கப்படுகிறது. அதாவது 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் நன்கு முறையிலான சேமிப்பு காலம் வழங்கப்படுகிறது இதில் எந்த விதமான சேமிப்பு திட்டத்தை வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

5 lakh Post Office Time Deposit Calculator in Tamil:

இந்த திட்டத்தில் 5 ஆண்டு சேமிப்பு காலத்தை தேர்வு செய்து 5 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு வட்டியாக மட்டுமே 2,24,974 ரூபாய் கிடைக்கும்.

அதாவது ஐந்து ஆண்டுகள் முடிவில் நீங்கள் உங்களுக்கு 7,24,974 ரூபாய்யை மொத்த தொகையாக பெற்றுக் கொள்ளலாம்.

அஞ்சல் துறையில் மாதம் 500 ரூபாய் செலுத்தி 74,82,556 அளிக்க கூடிய ஓய்வூதிய திட்டம்

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement