கடி ஜோக்ஸ் கொஞ்சம் படிச்சு பாருங்க | Kadi Jokes Tamil Latest

kadi jokes tamil latest

Kadi Jokes Tamil Latest

பொதுவாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஓடி ஓடி உழைக்கிறார்கள். மேலும் வேலையில் இருக்கும் மன அழுத்தம், வீட்டில் இருக்கும் டென்ஷன் போன்றவற்றால் மன அழுத்தத்திற்கு ஆளாகுகிறார்கள். மன அழுத்தத்தில் இருந்தால் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். அதனால் எந்த நோய் நொடியும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் வாய் விட்டு சிரிக்க வேண்டும். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று பழமொழி கூட இருக்கிறது. இன்றைய காலத்தில் பெரும்பாலும் மொபைலை தான் பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர்களுக்கு உதவும் வகையில் மனம் விட்டு சிரிப்பதற்கு இல் கடி ஜோக்ஸ்களை பதிவிட்டுள்ளோம். அதை படித்து விட்டு மன அழுத்தம் இல்லாமல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்.

சில கடி ஜோக்ஸ்:

  1. ஒருத்தன் சாப்டறதுக்கு முன்னாடி Fanஆ off பண்ணிட்டு சாப்பிட்டான் ஏன்?

விடை: ஏன அவரோட அப்பா வியர்வை சிந்தி சாப்பிட சொன்னாராம்.

2. எல்லா SEAலையும் குளிக்க முடியும் ஆனால் ஒரு SEAல குளிக்க முடியாது அது என்ன SEA?

விடை: மிக்சி

3. கிரிக்கெட் Match பார்த்துக்கிட்டு ஒரு கொசு தீடிர்னு செத்து போச்சாம் ஏன்?

விடை: ஏன இந்தியா ALL OUT ஆயிடிச்சாம்.

4. புறா அணில் இரண்டில் எதுக்கு கிட்ட Letter கொடுத்த அது சரியான Address க்கு பொய் சேரும்?

விடை: அணில் தான். ஏனா அது கிட்ட தான் Pin code இருக்கு

5. ஒரு English தெரிஞ்ச மாடு Thetre போனதாம் அங்க போனதும் கதவை கடிக்க ஆரம்பிச்சிட்டாம். ஏன்

விடை: ஏனா அந்த கதவுல Pullனு எழுதி இருந்திச்சாம்.

6. பொருள் வைக்க யூஸ் பண்ண முடியாத பை எது?

விடை:தொப்பை

7. அதிக Weight தூக்குற பூச்சி எது?

விடை:மூட்டைப் பூச்சி

8. தாஜ்மஹாலுக்கு பெயிண்ட் அடிச்சா என்ன ஆகும்?

விடை: செலவாகும்

9. நோயாளி: பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்…டாக்டர்…?

டாக்டர்: 5 லட்ச ரூபாய் ஆகும்ங்க…!

நோயாளி: ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டு வந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க…?

10. ஏன்டா மணி! பரீட்சையில் எல்லா பாடத்திலேயும் கம்மியா மார்க் எடுத்து இருக்க?

விடை: நீ தான அப்பா எல்லாத்துலையும் சிக்கனத்தை கடைபிடிக்கனும்னு சொன்ன. அதான் மா.

11. ரெண்டு பேர் ஒரு ஹோட்டலுக்கு போய் நாலு நாலு இட்லி ஆர்டர் பண்றாங்கஅதை சாப்பிட்டதும் அவங்களுக்கு food poison ஆகிடிச்சி ஏன்.?

விடை: ஏன்னா அது நாலு நாள் இட்லி

கவலைகளை மறந்து சிரிக்க இதை மட்டும் ஒரு முறை படியுங்கள்

உங்களின் கவலைகளை மறந்து சிரிக்க சில ஜோக்ஸ்

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்