ஆசிரியர் மாணவன் ஜோக்ஸ்

teacher student jokes tamil

Teacher Student Jokes

நம் முன்னோர்கள் காலத்தில் வேலை இல்லாத நேரங்களில் வாசலில் வந்து அமர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசுவார்கள். இதனால் அவர்களின் மனது மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருந்தது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் பரபரப்பு நிறைந்த உலகமாக இருக்கிறது. இதனால் வேலை விட்டு வந்த பிறகு நாலு செவுத்துக்குள்ளயே தான் இருக்கிறார்கள். கரண்ட் இல்லேன்னாலும் கூட வெளியில் வர மாட்டிக்கிறார்கள். காரணம் மொபைல் தான். உங்களின் மன அழுத்தம், கவலையை மறந்து சிரிப்பதற்கு சில ஜோக்ஸ்களை பதிவிட்டுள்ளோம் அதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

ஆசிரியர், மாணவன் ஜோக்ஸ்:

  1. ஆசிரியர் : நா இன்னும் ஒரு வருஷத்துல ரிட்டையர்டு ஆக போறேன்பா

மாணவன்: தேம்பி தேம்பி அழுகிறான்

ஆசிரியர்: அழுவதாப்பா…. நா இன்னும் ஒரு வருஷம் இங்க இருப்பேன்

மாணவன்: அத நெனைச்சாதான் சார் அழுகை வருது எனக்கு

2. ஆசிரியர் ரெண்டு பேர் ஒரு ஹோட்டலுக்கு போய் நாலு நாலு இட்லி ஆர்டர் பண்றாங்க அதை சாப்பிட்டதும் அவங்களுக்கு food poison ஆகிடிச்சி ஏன்

மாணவன் :ஏன்னா அது நாலு நாள் இட்லி

3. ஆசிரியர் ஏன்டா இன்னைக்கு ஹோமேஒர்க் பண்ணல

மாணவன்: கரண்ட் இல்லை டீச்சர்

ஆசிரியர் மெழுகுவர்த்தி ஏத்தி வச்சிக்க வேண்டியது தான

மாணவன்: ஆமா டீச்சர் முயற்ச்சி பண்ணேன் தீப்பெட்டி இல்லை

ஆசிரியர் ஏன்.?

மாணவன்: தீப்பெட்டி சாமி ரூம் ல இருந்தது அதான்

ஆசிரியர் உள்ளே பொய் எடுக்க வேண்டியது தான

மாணவன்: நான் குளிக்கல அதான் சாமி ரூம் உள்ளே போகல

ஆசிரியர் குளிக்கலாய ஏன்.?

மாணவன்: மேல டேங்க்ல தண்ணி இல்ல

ஆசிரியர் மோட்ரு போட்டு ஏத்த வேண்டியது தான எரும

மாணவன்: லூசு மாதிரி பேசாதீங்க டீச்சர் அதான் முதல சொன்ன கரண்ட் இல்லன்னு

4. ஆசிரியர்: ராமு இங்க வா… நான் உன்கிட்ட முதல்ல 2 பேனா கொடுக்கிறேன். அடுத்தது திரும்பவும் 2 பேனா கொடுக்கிறேன். அப்டின்னா உன்கிட்ட

மாணவன்: ஐந்து பேனா இருக்குது சார்

ஆசிரியர்: நான் சொன்னத ஒழுங்க கவனிச்சியா இல்லையா? முதல்ல 2 பேனா கொடுத்தேன். அப்றம் மீண்டும் 2 பேனா தந்தேன். இப்ப உன்கிட்ட எத்தனை பேனா இருக்கு? கரெக்டா சொல்லு பார்ப்போம்

மாணவன்: ஐந்து பேனா இருக்குது சார்

ஆசிரியர்: ரி உன் வழிக்கே வரேன். முதல்ல 2 சாக்லேட் கொடுக்கிறேன் அடுத்தது திரும்பவும் 2 சாக்லேட் கொடுக்கிறேன். அப்டின்னா உன்கிட்ட இப்ப எத்தனை சாக்லேட் இருக்கும்?

மாணவன்: 4 சாக்லேட் சார்

ஆசிரியர்: குட் பாய்.. இப்ப திரும்பவும் வரேன்.. நான் உன்கிட்ட 2 பேனா கொடுக்கிறேன். அடுத்தது திரும்பவும் வேற 2 பேனாக்கள தரேன். அப்டின்னா இப்ப எத்தனை பேனா மொத்தமா இருக்குது

மாணவன்: 5 பேனா சார் 

ஆசிரியர்: அடேய் ஏன்டா உசுற வாங்குற.. சாக்லேட் மட்டும் 4 வருது, பேனா எப்டிடா 5 வரும்

மாணவன்: சார், என் கிட்ட ஏற்கனவே ஒரு பேனா இருந்ததால ஐந்துன்னு சொன்னேன். சாக்லேட் எதுவும் இல்லாததால 4 அப்டின்னு சொன்னேன்

ஆசிரியர்: சொல்றதுக்கு ஒன்னுமில்ல.. கெளம்பு

இந்த கடிஜோக்ஸை ஒரே ஒரு முறை படித்து பாருங்கஉங்களால் சிரிப்பை நிறுத்தவே முடியாது

கவலைகளை மறந்து சிரிக்க இதை மட்டும் ஒரு முறை படியுங்கள்

உங்களின் கவலைகளை மறந்து சிரிக்க சில ஜோக்ஸ்

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்