வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

10 பெஸ்ட் திருக்குறள் மற்றும் விளக்கத்துடன் தெரிந்து கொள்வோம்

Updated On: November 10, 2025 4:31 PM
Follow Us:
best thirukkural in tamil
---Advertisement---
Advertisement

Best Thirukkural in Tamil | Famous Thirukkural in Tamil

திருக்குறள் என்பது தமிழ்க் கவிஞர் திருவள்ளுவரால் இயற்றப்பட்ட தலைசிறந்த படைப்பாகும். இவை 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களையும் கொண்டதாக இருக்கிறது. திருக்குறள் இரண்டு அடிகளில் 7 சீர் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஒரு கருப்பொருள் உள்ளது. மேலும் இவை திருக்குறள் மூன்று இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை அறத்து பால் (அறம் பற்றியது), பொருட் பால் (செல்வம்/ செழிப்பு), காமத்து பால் (காதல்/காதல்) ஆகும்.திருக்குறள் வாழ்வியலுக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் கொண்டதாக காணப்படுகிறது. உலக பொதுமறையாக திருக்குறள் கருதப்படுகிறது. 1330 குறளும் ஒரு கருத்தை பயின்றே வருகிறது. திருக்குறளை கற்பது முக்கியம் என பள்ளி மாணவர்களுக்கு அறிவுத்தப்படுகிறது.

திருக்குறள் 2 அடியில் இருந்தாலும் சில குறட்பாக்களை கற்பது கடினமகவே காணப்படுகிறது.  வாழ்வியல் குறித்து திருவள்ளுவர் கூறிய திருக்குறளில் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய முக்கிய திருக்குறள் சில உள்ளன. எளிமையான பத்து திருக்குறளை படித்தறியலாம் வாங்க. திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பால்களை உடையது. அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன. வாழ்க்கையில் நல்வழிக்கு செல்ல வேண்டும் என்றால் தினமும் ஒரு திருக்குறளை படியுங்கள்.அந்தவகையில் இந்த பதிவில் பெஸ்ட் திருக்குறள் மற்றும் அதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..

பெஸ்ட் திருக்குறள்:10 

1. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.- குறள் 45

பொருள்: இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

2. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. – குறள் 1

பொருள்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

3. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. குறள் 396

பொருள்: ஆற்று மணலை தோண்ட தோண்ட நீர் பெருகும், அது போல அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

4. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை. குறள் 12

பொருள்: உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்

5. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை. குறள் 400

பொருள்: ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.

தமிழ் எழுத்துக்கள் அட்டவணை

6. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். குறள் 664

பொருள்: இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.

7. எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். குறள் 666

பொருள்: எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

8. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. குறள் 596

பொருள்: எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

9. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். குறள் 619

பொருள்: ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

10. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். குறள் 421

பொருள்: அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now