இந்திய தண்டனை சட்டம் பிரிவு 406 – IPC Section 406 in Tamil

Advertisement

406 ipc In Tamil – இந்தியா தண்டனை சட்டம் 406

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர். பீமராவ் அம்பேத்கர் அவர்கள் ஆவார். இந்த உலகத்தில் மிக பெரிய அரசியல் அமைப்பு திட்டத்தை கொண்ட நாடு நம் இந்தியா தான். இருப்பினும் இன்னும் பல இந்தியர்களுக்கு நம் நாட்டின் அடிப்படை சட்டங்கள் மற்றும் உரிமைகளை பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கின்றன.

இவ்வாறு சட்ட விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் நாம் பல உரிமைகளை பல இடங்களில் இழக்கின்றோம். இந்திய தண்டனை சட்டம் குறித்து நமது பொதுநலம்.காம் பதிவில் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றோம்.  அந்த வகையில் 406 ipc சட்டத்தின் விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 279

406 ipc In Tamil

எந்தெந்த குற்றங்கள் செய்தால் 406 ipc சட்டத்தின் மூலம் தண்டனை கிடைக்கும் என்று முதலில் தெரிந்து கொள்வோம். IPC 405 செய்த குற்றத்திற்கு ipc 406 சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும். IPC 405 சட்டத்தின் கீழ் ஒருவரை நம்ப வைத்து ஏமாற்றினால் அவருக்கு Ipc 406 சட்டத்தின் கீழ் தண்டனைகள் வழங்கப்படும்.

அதாவது IPC 405 சட்டத்தின் கீழ் ஒருவர் தங்களிடம் நம்பி ஒரு பொருள் அல்லது ஏதேனும் ஒன்றை ஒப்படைத்து சென்றால் அந்த பொருளை நீங்கள் மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எந்த ஒரு காரணத்துக்காகவும் அந்த பொருளை தன் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துவது அல்லது விற்பது போன்ற நம்பிக்கை துரோகங்கள் செய்தால் IPC 406 சட்டத்தின் கீழ் நம்பிக்கை துரோகம் செய்தவருக்கு தண்டனை வழங்கப்படும்.

406 ipc punishment

Ipc 405 சட்டத்தின் கீழ் செய்த குற்றத்திற்கு ipc 406 சட்டத்தின் கீழ் நம்பிக்கை மோசம் செய்த குற்றத்தை யார் புரிந்தாலும், அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

406 ipc bailable or not

Ipc 406 சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்டனைகள் எதுக்கும் Bail கிடையாது இது ஒரு Non-Bailable சட்டமாகும்.

இந்த சட்டத்தைப் போல இந்தியாவில் குற்றங்களை ஒழிக்க பல சட்டங்கள் உள்ளது. குற்றம் செய்த நபர் தானாகவே முன்வந்து குற்றங்களை ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு தண்டனை குறைக்கப்படும். குற்றத்தை ஒப்புக்கொள்ள மறக்கும் குற்றவாளிக்கு அதிகமான சிறை தண்டனைகள் வழங்கப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்.. எதற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா?

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 
Advertisement