புதிய மோட்டார் வாகன சட்டம் அமல் 2022 | Tamil Nadu Traffic Rules and Fines 2022 in Tamil
New Traffic Rules 2022 in Tamil – தமிழ்நாடு முழுவது புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. தமிழக அரசு இது தொடர்பான அரசாணையை வெளியிட்டு இருக்கிறது. மோட்டார் வாகன சட்டம் 2019-ஆம் ஆண்டு சில திருத்தங்களை மேற்கொண்டுஅபராத தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது இதில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையானது 500 ரூபாய் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் இடையூறு செய்பவர்களுக்கும், உயிர்காக்கும் வாகனம் செல்லும்போது அதாவது ஆம்புலன்ஸ் செல்லும் போது அதற்கு இடையூறு செல்பவர்களுக்கும் அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது அது குறித்த தகவல்களை நாம் இப்பொழுது படித்தறியலாம் வாங்க.
திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் 2022 – New Traffic Rules 2022 in Tamil:
விதிமீறல் | பழைய அபராதம் தொகை | புதிய அபராதம் தொகை |
அதிவேகமாக வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு | ரூ.400/- | ரூ.1000/- |
சிக்னலை மதிக்காமல் ஓட்டுபவர்களுக்கு | ரூ.100/- | ரூ.500/- |
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்களுக்கு | ரூ.1000/- | ரூ.1000/- (இரண்டாவது முறை சிக்கினால் ரூ.10,000/-) |
குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு | ரூ.2000/- | ரூ.10,000/- |
ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டுபவர்களுக்கு | ரூ.100/- | ரூ.1000/- |
காரில் சீட் பெல்ட் போடாமல் ஓட்டுபவர்களுக்கு | ரூ.100/- | ரூ.1000/- |
பைக் ரேஸ் | ரூ.500/- | ரூ.5000/- |
ஒரு பைக்கில் 3 நபர் பயணித்தால் | ரூ.100/- | ரூ.1000/- |
நோ பார்க்கிங் | ரூ.100/- | ரூ.500/- |
நோ என்ட்ரி | ரூ.100/- | ரூ.500/- |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |